பக்கம்:பாலைப்புறா.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு.சமுத்திரம் 275

ஒரு எதிர்கால எய்ட்ஸ் நோய்க்காரி... ஒரு வருடத்திற்கு முன்பு, என் கணவர் என்று சொல்லப்பட்டவரால், இந்த நோயை சீதனமாக வாங்கிக்கொண்டவள். சர்வதேச பத்திரிகைளில் இடம் பெற்றவரின் அப்போதைய மனைவி. ஹெச்.ஐ.வி.இருப்பது தெரிந்தும் திருமணம் செய்த ஒரு பேடியின்துணைவி..இந்த ஆரம்ப-அதுவும் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து, எய்ட்சின் பெயரால்தூக்கி எறியப்பட்டவள். குற்றம் செய்யாமலே தண்டிக்கப்பட்டவள்....”

“இங்கே இருக்கிற டாக்டர்களில், ஒரு வேளை ஒரு சிலர் தவிர்த்து அனைவருமே மோசடிக்காரர்கள். இவர்கள் தோளில் தொங்கப்போட் டிருக்கும் ஸ்டெதாஸ்கோப்புகள், நம்மைப் போன்ற அப்பாவிப் பெண்களுக்கு தூக்கு கயிறுகள்! இவர்கள் போட்டிருக்கும் வெள்ளைக் கோட்டுகள், பிணங்கள் மேல் போர்த்தப்படும் வெள்ளைத் துணிகள்! இப்போது ஒரு முக்கியமான கேள்வி.. ஒரு இளைஞனுக்கு, எய்ட்ஸ் கிருமிகள் இருப்பதாக ஒரு டாக்டருக்கு தெரியவருகிறது. ஆனால், அந்த டாக்டரோ, அந்த இளைஞருடைய திருமணத்தில், சந்தோஷமாகக் கலந்துக்கொள்கிறார். ஒரு அப்பாவிப் பெண், சிறுகச் சிறுக சித்திரவதைக் குள்ளாகி, சின்னா பின்னமாவாள் என்று தெரிந்தும், அப்படிப்பட்ட திருமணத்தில் கலந்து கொள்கிறவர் டாக்டரா?...இல்லை...கொலை காரியா?... இது, கைத்தட்டுவதற்குரிய விஷயமில்லை...எச்.ஐ.வி. கல்யாண மாப்பிள்ளைகளையும், அவர்களது உற்றார் பெற்றோர்களையும், ஸ்டெதாஸ்கோப்பை பாசக் கயிறாகப் பிடித்திருக்கும் டாக்டர்கள் எனப்படும் கொலையாளிகளையும் என்ன செய்தால் தகும் என்று தீர்மானிக்க வேண்டிய விவகாரம்...”

டாக்டர் சந்திரா, இருக்கையில் குன்றிப்போய் கிடந்தாள். மேடையில் டாக்டர் முஸ்தபா, தலையை அங்கும் இங்குமாய் ஆட்டினார். டாக்டர் சுமதியால் பொறுக்க முடியவில்லை...எழுந்தாள்...கத்தினாள்...

‘தில் இஸ்.டுமச்...இது அதிகப் பிரசங்கித்தனம்...”

‘பேசி முடித்த பிறகு சொல்லுங்க”

“நோ நோ...’

கலைவாணியும் சுமதியும் மேடையில் காரசாரமாய் பேசிக்கொண்டு நின்றபோது, டாக்டர் அசோகன் எழுந்து ‘கலைம்மா...கலைம்மா’ என்றான். அவளைநிதானப்படுத்துவது போல்கையமர்த்தினான். கலைவாணி, உடனே அவனையும் சாடினாள். மைக் வழியாய், கூட்டம் முழுவதற்கும் கேட்கும்படியாய்க்கத்தினாள்...

‘என்னை பேசவிடாமல்..தடுப்தற்கு, ஒங்களுக்கும் யோக்கியதை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/275&oldid=635724" இலிருந்து மீள்விக்கப்பட்டது