பக்கம்:பாலைப்புறா.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

276 பாலைப்புறா

இல்லை அசோகன் சார்...ஏனென்றால், நீங்களும் இந்த மோசடியில் ஒரு பங்காளி. பசுத்தோல் போர்த்தியப் புலி...”

கூட்டத்தில் ஒரே பரபரப்பு...ஒப்புக்கு வந்த போலீசார் கூட, கண்களைத் துப்பாக்கியாய் ஆக்கினார்கள்...

கூட்டம் கிட்டத்தட்ட எழுந்துவிட்டது. வெளியே போகாமல், முன் பக்கமாக முண்டி அடித்தது. தலைமை வகித்த அசோகன். தன்னைப் பற்றி கலைவாணி அப்படி ஒரு அபிப்ராயத்தை சொல்லாமல் இருந்தால், ஒரு வேளை, ஜனகணமண பாடியிருப்பான். இப்போது கூட்டத்தை முடித்தால், அது கோழைத்தனம்... அதோடு, கலைவாணி தொடுகிற பிரச்சினையும் முக்கியமானது. இதற்குள் கூட்டத்தினர் ‘பேசுங்கள்... பேசுங்கள் என்று கோஷம் போல் குரலிட்டார்கள். அதை தனக்கு விடுத்த அழைப்பாகக் கருதி, மேடையில் நின்ற கலைவாணியை இன்னமும் ஒரு உதவியாள் என்ற இளக்காரத்தோடு, டாக்டர் சுமதி, மைக்கை தன் பக்கமாய் வளைத்துப் பேசினாள்...

“'கலைவாணி பேசுவது அப்சர்ட்...அபத்தம். திருமணம் என்பது ஒவ்வொருவருடைய தனிப்பட்ட விவகாரம்...ஒரு ஹெச்.ஐ.வி. ஆண் அல்லது பெண், திருமணம் செய்து கொள்ள நினைத்தால், அதில், இதைக் கண்டுபிடித்த டாக்டர் தலையிட முடியாது... வேண்டுமானால், திருமணம் ஆனபின்பு, அவன் மனைவியையும் டெஸ்ட் செய்து, உரிய ஆலோசனை வழங்கலாம்..இதைத்தான் டாக்டர்களாகிய நாங்கள் செய்கிறோம்....”

கலைவாணியால், தாள முடியவில்லை...சுமதியின் கையோடு சேர்த்து அந்த மைக்கைத் தன் பக்கமாய் இழுத்தாள். அவள், அங்கேயே அப்படியே நிற்கிறாள்.ஏதோ ஒன்று, அவள் வாய் வழியாய்ப் பேசுகிறது.சுமதியிடம் நேரடியாய்க் கேட்கிறது.

‘ஒங்களுக்கும் இன்னொரு நோயாளி கிடைத்த சந்தோஷம். இல்லியா சுமதியம்மா?”

கூட்டம் ஆர்ப்பரித்தது. “ஷேம்..ஷேம்... என்றது. பேசுவதற்காக மைக் அருகே வந்த டாக்டர்சுமதியைப் பார்த்து ‘ஏய்...ஏய் என்றது. பேசுவதற்காக மைக் அருகே வந்து டாக்டர் முஸ்தாபாவைப் பார்த்து போ, போ... என்றது. டாக்டர் சுமதி இதனால் ஒய்ந்து போனாள். கலைவாணி... தொடர்ந்தாள்...

‘ஆமாம்...சகோதரிகளே..உங்கள் ஒருத்தரை திருமணம் செய்யப் போகிறவன், இதே டாக்டர் சுமதியிடம் ஆலோசனை பெறும் ஒரு ஹெச்.ஐ.வி. நோயாளியாக இருக்கலாம். இந்தத் திருமணத்தில் இந்த அம்மாவும் கலந்து கொள்வார்கள். ஆலோசனை வழங்குவதற்கு, புதிதாய் ஒரு எய்ட்ஸ் நோயாளி கிடைக்கப் போகிற மகிழ்ச்சியில் கலந்து கொள்வார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/276&oldid=635725" இலிருந்து மீள்விக்கப்பட்டது