பக்கம்:பாலைப்புறா.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு.சமுத்திரம் 277

இந்த நாட்டில், கொலையாளிக்கு தண்டனை உண்டு. கொலைக்கு உடந்தையாய் இருப்பவர்களுக்கும் தண்டனை உண்டு. ஆனால் சுமதியம்மா போன்ற புதிய கொலையாளிகளுக்கு தண்டனை கிடையாது. மாறாக, கார் கிடைக்கும். பங்களா...கிடைக்கும்...பாரீன் டுர் கிடைக்கும்.இதோ இந்த டாக்டர் சுமதி, கோவையில் ஒரு ஹெச்.வி.ஐ. நோயாளியின் திருமணத்தில் கலந்து கொள்கிறார். ஒரு புதிய பெண் நோயாளியை உருவாக்கப் போகிறார். இந்த லட்சணத்தில் இவரும் ஒரு பெண்ணாம்...’

கூட்டத்தினர் அலைமோதினார்கள்...

‘வெட்கம்...வெட்கம்...ஷேம்...ஷேம்..ஏய் சுமதி...நீயெல்லாம் ஒரு பெண்ணாடி... நீயெல்லாம் ஒரு டாக்டராடி...”

கலைவாணி, அங்குமிங்குமாய் எழுந்த கூட்டத்தைக் கையமர்த்தினாள். ஒரு போலீஸ்காரர், மேடையில் ஏறி நின்றுகொண்டார். ஆங்காங்கே, ‘தன்னார்வத் தொண்டர்கள் கூட்டத்தை அமைதிப்படுத்தினர்.அதே கூட்டம் அமைதிப்பட்டாலும், ஆங்காங்கே, கலைவாணியைப் பார்த்து ‘பேசுங்க”.. ‘பேசுங்க”..என்றதும், அவளும் தொடர்ந்தாள். -

‘ஆனாலும் பெரியோர்களே கோவையில் நடைபெற இருந்த அந்தக் கல்யாணக் கொலையை, அநேகமாக நான் தடுத்துவிட்டேன்; மாப் பிள்ளைக்கு ஹெச்.ஐ.வி. இருப்பதை, மணமகளின் தந்தைக்கு டெலிபோன் மூலமாகவும், தந்தி மூலமாகவும் தெரிவித்து விட்டேன்’

பலத்த கைதட்டல்... பின்வரிசைக்காரர்கள் எழுந்து நின்றே கைதட்டினார்கள். அழைத்து வரப்பட்ட கூட்டம் இப்போது ஆர்ப்பரித்து, சுமதியைப் பார்த்து கொலையாளி...கொலையாளி என்றது.சில பெண்கள், ஆவேசப்பட்டு மேடைப் பக்கமாகக் கூட ஒடிவரப் போனார்கள். ஆனாலும், கலைவாணி கயைமர்த்தியதும், அப்படியே உட்காரவில்லையானாலும், நின்ற இடத்திலேயே நின்றார்கள். இப்போது அந்தக் கூட்டம், கலைவாணியின் பக்கம் வசப்பட்டு விட்டதால், டாக்டர் சுமதியின் முகம் இருண்டு போனது. அவள், மானசீகமாய் கோவைக்கும், இந்த மேடைக்கு மாய் போக்குவரத்து செய்து கொண்டிருந்தாள்... கலைவாணி தொடர்ந்தாள்.

‘இன்னொரு கொடுமை...கணவனுக்கு எய்ட்ஸ் கிருமிகள் இருப்பதாக ஒரு மனைவிக்கு தெரிந்தாலும், அவளால் சட்டப்படியான விவாகரத்து வாங்க முடியாது. இளங் காதலர் திருமணத்தைத் தடுக்கும் காவல் துறையினரால், ஒரு ஹெச்.ஐ.வி. திருமணத்தைத் தடுக்க முடியாது...இதனால் அப்பாவிப் பெண்களும், அவர்களின் தலைமுறையும் பூண்டற்றுப் போகிறார்கள். இதைத் தடுக்க நாட்டில் நாதி இல்லை...இந்த லட்சணத்தில் விழிப்புணர்வு இயக்கங்கள்..விழிப்புணர்வு அமைப்புகள்...எய்ட்ஸைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/277&oldid=635726" இலிருந்து மீள்விக்கப்பட்டது