பக்கம்:பாலைப்புறா.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

278 பாலைப்புறா

குணப்படுத்தி விடலாம்..ஆனால் இந்த எய்ட்ஸ் ஒட்டுண்ணிகளை குணப்படுத்தவே முடியாது.”

கூட்டம், மீண்டும் அலைமோதியது. செய்தியாளர்கள் நிமிர்ந்து உட்கார்ந்தார்கள்... காமிராவெளிச்சங்கள், கலைவாணியை, ‘குளோலப்பில் காட்டின. ஆனால், அவளோ, உணர்ச்சிப்பெருக்கில் பேசமுடியாமல் நின்றாள். இதற்குள், அதுதான் சாக்கு என்று டாக்டர் முஸ்தபா மேடையை விட்டுக் கீழே இறங்கினார். உடனே, அவரை, டாக்டர் சுமதியும் பின் தொடர்ந்தாள். அசோகன் மட்டும், பெண்அகலிகை மாதிரி குத்துக்கல்லாய் இருந்தான்.

கூட்டம், அங்குமிங்குமாய் அல்லோகல்லோலப்பட்டது. ஆளுக்கு ஆள் பேச்சு...கும்பல் கும்பலாய் விவாதம்...காரில் ஏறிய சுமதியை மறிக்கப் போவதுபோல் ஒரு ஒட்டம். கலைவாணியை வியப்பாய் பார்த்தபடியே பேச்சற்று நின்ற ஒரு கூட்டம். இவர்களை முந்தி, செய்தியாளர்கள் அவளை மேடையிலேயே சூழ்ந்தார்கள். கோவை எய்ட்ஸ் திருமணம் பற்றி அடுக்கடுக்காய்க் கேள்வி கேட்டார்கள். பரப்பரப்பான செய்தி கிடைத்த திருப்தி...எடிட்டோரியல் வில்லன்கள், வில்லங்கம் செய்ய முடியாத செய்தி...

கலைவாணி மேடையை விட்டு இறங்கினாள். இன்னும் ஆவேசம் அடங்கவில்லை..ஆத்திரம் தீரவில்லை...அவளுக்கும் தான் யார் என்று, ராமனுக்கு ஏற்பட்டது போன்ற சுய மயக்கம். சுற்றிச் சூழ்ந்து ஏதேதோ கேட்ட பெண்களிடம், கோர்வையாகப் பேசமுடியவில்லை. கடின உழைப்பிற்கு பின்னர் ஏற்படுவது மாதிரியான களைப்பு...கலைவாணி, அந்தப் பந்தலை விட்டு வெளியே வந்தாள்.

களவிளம்பரத் துறையின் மாவட்ட அதிகாரியை, இணை இயக்குனர் தாளித்துக் கொண்டிருந்தார். இந்த விழிப்புணர்வு கூட்டத்தை நடத்தி, இதன் மூலம் வெளியாகும் பத்திரிகை செய்திகளை டெல்லி மேலிடத்திற்கு அனுப்ப நினைத்த இணை இயக்குனர், பதறிப்போனார். இதற்காகவே வேனில் கொண்டு வரப்பட்ட செய்தியாளர்கள், இப்போது வேறு மாதிரி செய்தி எழுதுகிறார்கள்.

கலைவாணி, அந்தப் பக்கமாக வந்தபோது, இணை இயக்குனர் தாங்க முடியாமல் கேட்டார்.

‘'டாக்டர்சுமதியை ‘அட்டாக் செய்யுறதுக்கு எங்க மேடை தானாம்மா...ஒனக்கு கிடச்சுது...?”

‘நீங்க ஏன்...அப்படிப் பேசமாட்டீங்க...அந்தம்மா சார்பில் நீங்க நடத்துற ஒவ்வொரு பிலிம்சோவுக்கும். ஆயிரம் ரூபாய் வீதம் வாங்கி இருக்கீங்களே...அந்தமாவுக்கு வக்காலத்து வாங்கத்தான் செய்வீங்க”...

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/278&oldid=635727" இலிருந்து மீள்விக்கப்பட்டது