பக்கம்:பாலைப்புறா.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு.சமுத்திரம் 279

ஆடிப்போன இணை இயக்குனர், தனது சபார்டினேட்டான மாவட்ட அதிகாரியை, மிரட்டலோடு பார்த்தார். அந்த ஜூனியரோ, கிட்டத்தட்ட வாயிலும் வயிற்றிலும் அடித்தார். அவர்கள் உரையாடலில் சிபிஐ என்கொய்ரி, சஸ்பென்ஷன் போன்ற வார்த்தைகள், இணை இயக்குனரின் வாயில் இருந்து விழுந்து, மாவட்ட அதிகாரி சந்தானக்குமாரின் காதுகளில் ஏறின.

கலைவாணியின் கண் முன்னாலயே, கூட்டம் கலைந்தது. செய்தி யாளர்கள் வேனில் போய் விட்டார்கள். அங்குமிங்குமாய் வட்டமடித்துப் பேசிக்கொண்டு இருந்தவர்களும் போய்விட்டார்கள். கொண்டு வரப்பட்ட பெண்கள் என்பதால், அவர்கள் கூட்டத்தில் கைதட்டியதோடு சரி...கலை வாணியை ஆறுதலாய்ப் பார்த்ததே ஒரு சலுகை...ஆதரவாய் நிற்பது தனிப்படுத்தப்பட்ட ஒவ்வொருவருக்கும் அதிகப்படியான காரியம்.

கலைவாணிக்கு, அப்போதுதான்.யதார்த்தம் புரிந்தது.

கூட்டம், நிறுவனப்படுத்தப்படாதவரை, அது வெறும் ஒற்றை ஆட்களே...இன்று கேட்டு, நாளை மறக்கும் வகையினர். சினிமாக் கூட்டம் மாதிரி, தியேட்டருக்கு உள்ளேதான் ஒரு முகப்பட்ட கைதட்டல்.

டாக்டர் சந்திரா கிடைப்பாளா என்பதுபோல் அங்குமிங்குமாய் கலை வாணி பார்த்தாள். காணவில்லை. ஒருவேளை, அவளும் தப்பாக எடுத்துக் கொண்டாளோ...என்னமோ..இனிமேல் எங்கே போவது...திருடனுக்குக் கூட கன்னக்கோல் சாத்த ஒரு இடம் உண்டு.ஆனால்... திருத்தப்போன வளுக்கு எந்த இடம்...? சுமதியை சொல்லால் தொலைத்தாகிவிட்டது... அசோகனையும் பகைத்தாகிவிட்டது. எங்கே போவது? நிற்பதற்கு நிழல் கூட வேண்டாம்...வெயில் கூட கிடைக்காமல் போய்விட்டதே...

கலைவாணிக்கு, மேடைப்பேச்சின் வெறுமை இப்போது நன்றாகவே உறைத்தது. கைதட்டியவர்கள் போய்விட்டார்கள். அவளுக்கு தோள் கொடுப்பது போல் மேடை நோக்கி வந்தவர்கள் கூட, வீடு நோக்கிப் போய்விட்டார்ள். இனிமேல், அவர்கள் யாரோ, இவள் யாரோ. முகமறியா மனிதர்களிடம் பேசி...முகம் போகவில்லையானாலும், முகமூடி போய் விட்டது! பழையபடியும் அனாதரவான நிலை...அனாதையாய்ப் போன தனிமை.தனிப்படுத்தப்பட்ட தனிமை.தனதுநிழலை வெட்டுவதற்காக, தன்னையே வெட்டிக்கொண்டதுயரம்...ரத்தம் வராதரணம்...

கலைவாணி, அந்த ஆரம்ப சுகாதர வளாகத்தில் இருந்து, வெளியே வந்தாள். சந்திரா வீட்டுக்குப் போகலாம், என்றால் அங்கே அவள் அம்மா.. மோகன்ராம் வீட்டுக்கு என்றால், அங்கே மனோகரின் அக்கா...சொந்த வீட்டிலோ...சொந்தமில்லாமல் போன உடன் பிறப்புக்கள்....

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/279&oldid=635728" இலிருந்து மீள்விக்கப்பட்டது