பக்கம்:பாலைப்புறா.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

280

s

கலைவாணி கால் இருப்பது வரைக்கும் நடப்பதுபோல் நடந்தாள். மனோகரை மனதுக்குள் திட்டிக்கொண்டே நடந்தாள். உடம்புக்குள் இருக்கும் எய்ட்ஸ் கிருமிகள் அத்தனையும், மனித அவதாரங்களாகி, அந்தப்பகுதியில் நடமாடுவதைப் பார்த்துவிட்ட கோரம். இதோ எத்தனையோ மனிதர்கள் அருகருகே போகிறார்கள். ஆனால், ஒருவரிடமும் ஒட்டிக்கொள்ளமுடியாது. இதோ எத்தனையோ வீடுகள், பெயர் என்னமோ அன்பு இல்லமாம்... முருக சரணாலயமாம்..ஆனால் ஒன்றில் கூட இருக்க முடியாது. யதார்த்தவாதி, வெகுஜன விரோதி என்பது எவ்வளவு உண்மை...

கண்களை அரைகுறையாய்மூடி நடந்த, கலைவாணியை உரசுவதுபோல் ஒரு மாருதி கார் நின்றது.

‘கலையம்மா...கார்ல ஏறிக்கோ’

கலைவாணி, அசோகனை பிரமித்துப்பார்த்தாள். அசையாமல் நின்றாள். அவன் சர்வசாதாரணமாய் சொன்னான்.

‘பயப்படாதே... இந்த வில்லன் ஒன்னை கடத்திட்டுப் போக வர்ல. அப்படி ஒனக்கு சந்தேகம் வந்தால், இதோ ரோட்டுலே போகிறவர்களில் ஒருத்தரை கை காட்டு...அவரையும் ஏற்றிட்டு போகலாம்...சரி ஏறிக்கோ கலையம்மா..., பிரமாதமாய் வெளுத்து வாங்கிட்டே...ஏன் அப்படி பார்க்கே...நிசமாத்தான்...டாக்டர் சுமதியோட சுயரூபமே...இன்னிக்குத்தான் எனக்கே தெரியுது... ஹெச்.ஐ.வி.க்காரன். கல்யாணத்துக்கா போறாள்...?’

“ஆமாம்...நீங்க போகலியா...?"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/280&oldid=635730" இலிருந்து மீள்விக்கப்பட்டது