பக்கம்:பாலைப்புறா.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு.சமுத்திரம் 281

“ஒன்கிட்ட எனக்குப்பிடிச்சது இதுதான்கலையம்மா...நீ... உண்மையை அடக்க நினைச்சாலும், அது ஒன்னால முடியாது...நீ என்னை சுமாரான நல்லவன்னு நினைத்தால், நீ இப்போ கார்லே ஏறணும்... பச்சையாய் சொல்லப் போனால் ஒனக்கு ஒரு இடம் கொடுக்கணும் என்கிறதவிட, என்னைப் பற்றி நான் தெரிஞ்சுக்கணும் என்கிறதுதான் என்னோட நோக்கம். சத்தியமாய் சொல்றேன். சுமதிக்கும் எனக்கும், அவள் அனுப்புற ஹெச்.ஐ.வி. கேஸ்களை, டெஸ்ட் செய்து ரிசல்ட் கொடுக்கிறதோட சரி...ஒரு டெஸ்டுக்கு நூற்று ஐம்பது ரூபாய் ஆகும், அதைக்கூட நான் வாங்கியது இல்லை... நீ எனக்கு ‘பெனிபிட் ஆப்டவுட் கொடுத்தால், கார்ல ஏறு’

கலைவாணி, காரில்...ஏறிக் கொண்டாள்...அசோகன் அருகே முன்னிருக்கையில் ஏறிக்கொண்டாள். சிறிது நேர மெளன ஒட்டம். பின்னர், கலைவாணி குனிந்த தலையை நிமிர்த்தாமலே..ஆண்டறிக்கையில் தான் படித்ததை, ஒன்றுவிடாமல் ஒப்பித்தாள். பேசி முடித்துவிட்டு, அவனை நிமிர்ந்து பார்த்தாள்; அவனோமுகம் இறுகிப்போனான். காரைதாறுமாறாக ஒட்டினான்.

அசோகன், அந்த மருத்துவமனையின் முன்பக்கம் காரை நிறுத்தினான். கலைவாணிக்குக்கூட காத்திராமல், அலுவலக அறைக்குள் ஒடினான். நாற்காலியை கீழே விழத் தட்டுவதுபோல் உட்கார்ந்தான். டெலிபோனை சுழற்றினான்.

‘ஹெலோ.சுமதியா...ஆமா...கலைவாணி விஷயமாத்தான் பேசுறேன். ஒங்க ஆண்டறிக்கையில்...எனக்கு மாதா மாதம் பத்தாயிரம் ரூபாய் கொடுப்பதாய் கணக்கு இருக்குதாம்..என்னோட மருத்துவமனை கூட ஒங்களுக்கு சொந்தமாம். நோ.நோ.கலைவாணி பொய் பேசமாட்டாள். இப்பவே நீங்க... போன வருடத்து ஆண்டறிக்கை...இந்த வருடத்து ஆண்டறிக்கையோட வரணும்..என்கிட்டேகாட்டணும். என்ன...என் கிட்ட காட்ட வேண்டிய அசிவயம் இல்லியா...? ஒகே...? அப்போ... போலீஸ்லே கம்ப்ளைன்ட் கொடுப்பேன்...நோசால்சாப்பு...”

டாக்டர் அசோகன், எதிரே நின்ற கலைவாணியை அங்கீகாரமாய்ப் பார்த்தான். ஏற்கனவே அங்கே உட்கார்ந்திருந்த சந்திராவை, அப்போதுதான் பார்ப்பது போல் பார்த்தான். ஏதோ பேசப்போனான். அதற்குள் ஒரு டெலிபோன்.

‘ஹெலோ.சொல்லுங்க... இந்தா பாரும்மா... நீ எவனை வேண்டு மானாலும் ஏமாற்று...ஆனால் என்னை ஏமாத்திடலாம்னு நினைக்காதே! ஒன்கிட்டே ஒரு பைசாவாவது வாங்கியிருப்பேனா...? என்னை எதுக்குடி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/281&oldid=635731" இலிருந்து மீள்விக்கப்பட்டது