பக்கம்:பாலைப்புறா.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

282 பாலைப்புறா

விற்கிற? ஒன்னைத்தான்..ஏடின்னு சொல்லிட்டு.அதுக்கு மேல் பேசாமல் போனதுக்குகாரணம்...இங்கே ரெண்டு பெண்கள் இருக்காங்க..பால் கொடுத்த மாட்டையா...பல்லைப்பிடிச்சுப்பார்க்கிறே...இன்னும் ஒரு மணி நேரத்தில் ஆண்டறிக்கையோட நீ வரலன்னா...அப்புறம் நீ இருக்க போற இடம் ஜெயிலு... நான் உணர்ச்சிவசப்படல...இப்போ தான்...கலைவாணி என்கண்ணைத் திறந்திருக்காள். சரிதான் போனவச்சிட்டு...இங்கே வாடி....”

கலைவாணியும் சந்திராவும், வாயாடாமல் போனார்கள். அசோகனை அதிர்ந்து பார்த்தார்கள்..இந்தத் தாக்கத்தில், ஒருவரை ஒருவர் அனுதாபமாகவும் பார்த்துக்கொண்டார்கள். இப்போது தான், அசோகன் பற்களைக் கடிப்பதை முதல் தடவையாக் பார்க்கிறார்கள்..இந்த மாதிரி, அவன் கோபப்பட்டு பேசியதை, முதல் தடவையாகக் கேட்கிறார்கள். அவனை, ஆமோதிப்பாய் பார்த்தார்கள். சந்திரா, தான் வந்ததன் நோக்கத்தை சொல்லலாமா வேண்டாமா என்று யோசித்த போது, இன்னொரு டெலிபோன். இந்த மாதிரி சந்தர்ப்பங்களில், டெலிபோனை எடுத்து விபரங்கள் கேட்டு, அதை அசோகனிடம் நீட்டும் சந்திரா, சும்மாவே இருந்தாள். அசோகனே, சிறிது நேரம் கடந்து டெலிபோனை எடுத்தான்.

‘இந்தாயாரும்மா சுமதி...ஸாரி.எம்.எல்.ஏ.வா..நானேதான் பேசறேன் சார். சுமதி விஷயமா. வெளிநாட்டு நிறுவனங்களுக்கு என்னை விற்று இருக்காள் சார்.அவள் ஒரு கிரிமினல்....என்ன சார்..நீங்க நான் என்ன சொல்லப்போறேன் என்கிறதைக்கூட கேட்ட மறுக்கிறீங்களே... ஒருமோசடிப் பேர்வழியோட எப்படிசார்ஒத்துப்போக முடியும்...? நோநோ, ஐ யாம் ஸாரி... நீங்க பேசுறது ஒரு எம்.எல்.ஏ. பேசறதுமாதிரி தோணல.ஒகே நீங்க வைக்கும் முன்னாலயே, நானே டெலிபோனை வச்சிட்றேன்...”

அசோகன், டெலிபோனை வைத்துவிட்டு, சிறிது நேரம் அப்படியே குமைந்து கிடந்தான். பிறகு, அந்தப் பெண்களை பொதுப்படையாய்ப் பார்த்தபடி பேசினான்...

‘இந்த எம்.எல்.ஏ.வைப்பாருங்க இங்க வந்து ஒசியிலே மெடிக்கல்...செக்கப் செய்த மனுஷன். இப்போ அசல் கொம்பன் மாதிரி பேசுறான். சுமதி மேல நான் ஏதாவது நடவடிக்கை எடுத்தால், அது எனக்கே விபரீதமாய் போய்விடுமாம்...எம்.எல்.ஏ., மக்கள் பிரதிநிதின்னுதானே அர்த்தம். ஒரு வேளை மாக்கள் பிரதிநிதின்னு ஒரு அர்த்தம் இருக்கா...?”

‘என்னைக் கூட அந்த சுமதி.போகிற போக்கில் மிரட்டிவிட்டுப் போறாள்..அசோக், கலைவாணியை அப்படிப் பேசும்படி நான்தான் தூண்டிவிட்டேனாம். இன்னும் மூன்று நாளையில் எனக்கு சஸ்பென்ஷன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/282&oldid=635732" இலிருந்து மீள்விக்கப்பட்டது