பக்கம்:பாலைப்புறா.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு.சமுத்திரம் 283

வாங்கிக் கொடுக்காவிட்டால், அவள் பேரை மாற்றிக் கூப்பிடலாமாம். முஸ்தாபா...என்னடான்னா, ரெண்டு நாள் போதும் என்கிறான். .’

கலைவாணி,...இருவரையும் மாறிப் மாறிப் பார்த்தாள். டாக்டர் சுமதியின் சுய ரூபத்தைத் தொட்டுக்காட்டிவிட்டால், ஆளுக்கு ஆள்பிடித்துக் கொள்வார்கள் என்று நினைத்தது, எவ்வளவு தப்பாய் போயிற்று... நியாயத்தை வெளிப்படுத்தினால், அநியாயந்தான் அதிகமாகுமோ... இல்லன்னா...இந்த எம்.எல்.ஏ.”

‘'டாக்டரய்யா..., ஒங்களுக்கோ, டாக்டரம்மாவுக்கோ ஏதாவது நடக்கிறதாய் இருந்தால், நான் சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பேன். இல்லாட்டி தீக்குளித்து சாவேன். இது சத்தியமான வார்த்தை’

சந்திரா, கலைவாணியின் கைகளைப்பிடித்து, தன் கைக்குள் வைத்துக்கொண்டாள். அசோகன், அங்குமிங்குமாய்தலையை ஆட்டிவிட்டு, ஒரு சிரிப்பு சிரித்தான். பிறகு கலைவாணி எதையோ ஒன்றைக் கண்டுபிடித்த குதுகலத்தோடு பேசினாள்.

‘நெசமாவே சுமதி ஒரு டாக்டரா?’

“ஆமா...நீ சொல்றதை நினைத்தால், அப்படிக்கூட ஒரு சந்தேகம் வருது. ஆனாலும் அந்த சுமதியை, தனிப்பட்ட முறையில் எதிர்க்கிறது கொஞ்சம் சிரமந்தான். அவள்கிட்ட ஆள்பலம் இருக்குது...பணபலம் இருக்குது..அழகு பலம் இருக்குது... அதனால் அவளைநிறுவனரீதியாய் எதிர்க்கணும். நாமே ஒரு விழிப்புணர்வு அமைப்பை ஏற்படுத்தினால் என்ன...? எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வு... இதையே ஏமாற்றுப் பேர்வழிகள் மேல் ஒரு பழிப்புணர்வாய் ஆக்குவோம்’

‘நடக்குற காரியமாஅசோக்...?”

‘ஏன் நடக்கப்படாது...? கலைவாணி கிட்ட பேச்சுத்திறன் இருக்குது.. ஒன்கிட்ட வைத்தியத்திறன் இருக்குது.. என்கிட்ட மருத்துவமனை இருக்குது.. எல்லாவற்றுக்கும் மேலே...நம்மகிட்ட நியாயம் இருக்குது.. விசுவாசம் இருக்குது; இன்றைக்கு பல தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், பல வெளிநாட்டு அமைப்புகளிடமும், அரசாங்கத் துறைகளிடமும் தங்களுக்கே தெரியாத திட்டங்களோட பெயர்களைச் சொல்லி, பணம் கறக்குறாங்க... இந்த நிறுவனங்களுக்கு எங்கிருந்து பணம் வருது...? எதற்காக வருது என்பது பற்றி கணக்கு வழக்கே கிடையாது. ஆனால் நாம் அமைக்கப்போகிற அமைப்பு...தனியார் அமைப்பு இல்ல.. இதுல உறுப்பினர்களைச்சேர்ப்போம். சந்தாவசூலிப்பேம். ஆண்டு தோறும், நம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/283&oldid=635733" இலிருந்து மீள்விக்கப்பட்டது