பக்கம்:பாலைப்புறா.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

284 பாலைப்புறா

கணக்கு விபரத்தை...ஜெனரல்பாடிக் கூட்டத்தில் ஒப்பிப்போம்...நோட்டீஸ் போர்ட்ல ஒட்டுவோம்...இந்த முறையைக் கொண்டு வந்தால், இந்த அமைப்புக்களை வைத்திருக்கிற பாதிப்பேர் ஜெயிலுக்கு போகவேண்டி யவங்க என்கிறதாவது தெரியவரும்’

‘'டாக்டரய்யா... நிச்சயமாய் இப்படி ஒரு அமைப்பு தேவைதான். ஆனால், இதனோட நோக்கம் ஹெச்.ஐ.வி. திருமணங்களை தடுப்பதாய் இருக்கணும்... சரியா?

‘சரியே தான்...’

‘அய்யோ.. எனக்கு எப்படி சந்தோஷமாய் இருக்குது தெரியுமா?”

கலைவாணி எழுந்து நின்று, கைகளை ஆட்டி ஆட்டி தோள்களைக் குலுக்கினாள். இப்போது, அந்த மூவருக்கும், சுமதி ஒரு பொருட்டாகத் தெரியவில்லை. சிந்தனை முழுவதும், எதிர்பாராமல் கருவான விழிப்புணர்வு அமைப்பின் மீது ஒருமுகப்பட்டது. அப்போது பார்த்து அடுத்த டெலிபான்...

‘ஹெலோ,...நான் டாக்டர் அசோகன்தான் பேசறேன்... சொல்லுங்க... இன்ஸ்பெக்டர் சார். டாக்டர் சுமதி தானே...அசல் பொம்பளைக்கேடி. சார்...நானா..? நான் எதுக்கு ஸ்டேஷனுக்கு வரணும்...? சுமதியை சத்தம் போட்டது உண்மை. ஆனால் கொலை செய்யப் போறாதாய் மிரட்டலியே... இந்தாப் பாருங்க இன்ஸ்பெக்டர்.ஒங்களாடலத்திக்கம்பைவிட, என்னோட ஸ்டெதாஸ்கோப் உயர்வானது. புனிதமானது. இந்த மிரட்டுகிற வேலை... என்கிட்ட வேண்டாம். சட்டம் கத்துக்கிறது முக்கியம்தான்.அதைவிட முக்கியம் மரியாதை...கத்துக்கிறது”

டெலிபோனை வைத்த அசோகன், முகமெங்கும் வியர்வைத்துளிகள். எதிர்பாராத எதிரியைச் சந்தித்த பிரமிப்பு. அசையாது கிடந்தான். சந்திரா அவன் தோளைப் பிடித்த உலுக்கியபோதுதான், அவன் மீண்டும் அசோக்னானான்.

‘இந்த சுமதி... என்னால் அவள் உயிருக்கு ஆபத்துன்னு புகார் கொடுத்திருக்காளாம். அதனால, நான் போலீஸ் நிலையத்திற்கு போகணுமாம். போகாட்டால், கையிலே விலங்கு போட்டு தெருவுல என்னை நாய் மாதிரி இழுத்துட்டுப் போவானாம்...இன்ஸ்பெக்டர், காட்டு மிராண்டியாய் ஆகிட்டான்...'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/284&oldid=635734" இலிருந்து மீள்விக்கப்பட்டது