பக்கம்:பாலைப்புறா.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

285

2

ஒரு காலத்தில், பொன் விளையும் பூமியாக விளங்கி, இப்போது, மலட்டு வீட்டு மனைகளான பகுதி... ஆனாலும், ஆங்காங்கே கட்டிடங்கள் முளைவிட்டுக் கொண்டுதான் இருந்தன. இந்தப் பகுதியில், அசோகன் எப்போதோ மூன்று கிரவுண்ட் வாங்கிப் போட்டிருந்தான். வாங்கிப் போட்டான் என்பதைவிட, அவன் தந்தை ஊரில் இருந்த நிலபுலன்களை, பாகப்பிரிவினை செய்து, ஐந்தாண்டு கால குத்தகைக்கு பணமாய் அவன் பெயரில் வாங்கிப் போட்டார். இப்போது, அந்த இடத்தில் ஒரு கீற்றுக் கொட்டகை... முன்பக்கத்தில் வாசலைத் தவிர்த்த, இரண்டு பக்கங்களிலும், வெறும் மண்சுவர்கள். அவற்றிற்கு மேல் மூங்கில் தட்டிகள். பின்பகுதியில் வாசல் ஒதுக்கப்பட கதவில்லாத அடைப்பு... காயப் போட்ட கோரைப் புற்களே, சுவர்களான அலுவலக அடைப்பு. அங்கே ஒரு நீண்ட மேசைக்குப் பின்னால் இரண்டு நாற்காலிகள்... முன் பக்கம் இரண்டு பெஞ்சுகள்... அத்தனையும், சந்திரா, அசோகன் வீடுகளில் உள்ளவை...

முன் பக்கம் பனைத் தூண்கள் தாங்கிப் பிடிக்கும் கொட்டகைத்தரை, சாணத்தால் மெழுகப்பட்டு பச்சை பசேல் என்று காட்சி காட்டியது. ஒரு மேஜையில், பல்வேறு பத்திரிகைகள் பாதியாய் மடித்தும், விரித்தும் வைக்கப்பட்ருந்தன. ‘எய்ட்ஸ் பெண்ணின் குமுறல்’, ‘எனக்கு எய்ட்ஸ் வந்தது... இளம் பெண்ணின் பகிரங்க அறிவிப்பு’, ‘கோவையில் எய்ட்ஸ் நோயாளிக்குத் திருமணம். டாக்டர் உடந்தை அவளுக்கு வந்தது ஆவேசம்! அத்தனையும் சொல்லிவிட்டாள் ‘ஹெச்.ஐ.வி. இன்பெக்ட்டட் உமன்ஸ் பிளைட்”

இந்த மாதிரியான பத்திரிகை தலைப்புக்களால், கலைவாணியும் சந்திராவும் முகம் சுழித்தாலும், அந்த சுழிப்பிலும் ஒரு புன்னகை...

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/285&oldid=635735" இலிருந்து மீள்விக்கப்பட்டது