பக்கம்:பாலைப்புறா.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

286 பாலைப்புறா

கலைவாணியின் புகைப்படத்தோடு வெளியான செய்திகள். அரசின் கண்களைத் திறக்கவில்லையானாலும், அதற்கு வரி கொடுக்கும் மக்களின் கண்ணைத் திறக்கும் என்ற நம்பிக்கை டாக்டர் சுமதி போன்றவர்களின் ‘விழிப்புணர்வுகளைத்டுக்க முடியர்மல் போனாலும், அவர்களின் பிடியைத் தளர்த்த முடியும் என்கிற எதிர்பார்ப்பு

டாக்டர் சந்திராவின் சேமிப்பாலும், அசோகனின் நன்கொடையாலும், கலைவாணியின் உழைப்பாலும் உருவான இந்த அமைப்பிற்கு என்னபெயர் வைக்கலாம் என்பதில், அந்த மூவருக்கும் கருத்து வேற்றுமை ஏற்பட்டது. பெண்கள் மீட்பு இயக்கம் என்று பெர்த்தாம் பொதுவாய்வைக்கலாம் என்பது சந்திராவின் கட்சி. அமைப்பின் பெயர் எய்ட்ஸ் நோயாளிகளுக்கும் ஆறுதல் காட்டுவது போல் இருக்க வேண்டுமே தவிர, ஒரு குறிப்பிட்ட நோயாளித் தரப்பை ஊனப்படுத்துவதாய் இருக்கக்கூடாது என்பது அசோகனின் வாதம்... ஆனாலும் கலைவாணியின் பிடிவாதத்தாலும், சுமதியிடம் இருந்து பிரிந்து அவளோடு சேர்ந்து கொண்ட பெண்களின் ஆதரவாலும், எய்ட்ஸ் திருமண தடுப்பு இயக்கம் என்று பெயரிடப்பட்டது. ஹெச்.ஐ.வி. என்கிற வார்த்தையை எய்ட்ஸ்ஸுக்குப் பதிலாய் போடலாமே என்று சந்திரா கேட்டாள். ஆனால் அது பொது மக்களுக்கு புரியாது என்பதால், அவளும் இறுதியில் உடன்பட்டாள்.

இதர தொண்ட நிறுவனங்களைப் போல், ஒப்புக்கு ஒரு டிரஸ்டை வைக்காமல், சமூகத்தின் அனைத்துத் தரப்பினரையும் உறுப்பினர்களாக்க சந்தா ரசீதுகள் அச்சாகிவிட்டன. உறுப்பினர் கூட்டத்தில் புதிய நிர்வாகி களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும், அதுவரை சந்திராவும் கலை வாணியும் அமைப்பாளர்களாக செயல்படுவது என்றும் தீர்மானமாயிற்று. அசோகன், எந்த பதவிப் பொறுப்பையும் ஏற்க மறுத்துவிட்டான். ஆனாலும் பாதி நேரம் இந்தக் கொட்டகைதான், அவன்குடியிருப்பு.

கொட்டகைக்கு கீழே, ஆங்காங்கே போடப்பட்ட பெஞ்சுகளில் பத்துப் பதினைந்து இளம் பெண்கள் இயங்கிக் கொண்டிருந்தார்கள். சந்தாப் புத்தகங்களில் உள்ள பெயர்களை ஒரு ரிஜிஸ்டருக்கு மாற்றிக் கொண்டிருந்தவர்கள், பேனர் தயாரித்துக் கொண்டிருந்தவர்கள்... செவ்வக அட்டைகளில், எய்ட்ஸ் பற்றிய உண்மைகளை திருக்குறள் போல் தீட்டிக் கொண்டிருந்தவர்கள். இப்படி ஒரே இயக்க மயம். வெளியே, ஆண்களும் பெண்களுமாய் வேடிக்கைபார்த்துக் கொண்டிருந்த ஒரு கூட்டம்.

அசோகன், அந்தக் கொட்டகைக்கு முன்னால் காரை நிறுத்திவிட்டு, இயங்கிக் கொண்டிருந்த பெண்களையும், கலைப்பாடு கொண்ட அவர்களின் செயல்பாடுகளையும் பார்த்தபடியே, பின் பக்கத்து அடைப்பை நோக்கி நடந்தான். அவனைப் பார்த்து எழுந்து நின்ற சந்திரா - கலைவாணி...

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/286&oldid=635736" இலிருந்து மீள்விக்கப்பட்டது