பக்கம்:பாலைப்புறா.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு.சமுத்திரம் 287

ஜோடியைப் பார்த்துவிட்டு ஏதேது மரியாதை பலமாய் இருக்குது என்றான். அவன் உட்கார்ந்ததும், சந்திரா கவலை தெரிவித்தாள்.

‘எனக்கு என்னவோ பயமா இருக்குது அசோகன். ஆழம் தெரியாமல் காலைவிட்டது மாதிரி...”

‘நீச்சல் தெரிந்தவங்களுக்கு ஆழம் தெரிய வேண்டியது இல்லை... நேர்மையான தொண்டர்களுக்கு பின்விளைவுகள் தெரியவேண்டியதில்லை. ஆனாலும் ஒன்றை நான் சொல்லியாகணும்... நீங்க ரெண்டு பேரும், முக்கியமான பொறுப்புக்கு வந்திருக்கீங்க. பத்திரிகைகள் செய்திகள் போட்டாலும் போட்டது, இப்போது கலைம்மாவுக்கு ஏகப்பட்ட அழைப்பு கள் குவியுது. ஆனாலும் இவை திடீர் மழையில் காளான் முளைச்சது மாதிரி. நிரந்தரமான உழைப்புதான் இதை நிலைப்படுத்தும்...’

“ஒரு மைக் கொண்டு வரட்டுமா அசோக்?...’

‘இந்த மாதிரி... அவசரக் குடுக்கைத்தனம் ஒனக்கு ஆகப்படாது

டாக்டரம்மா... கலைவாணி ஒனக்குந்தான்... இனிமேல் நீ ஒன்னையே நினைத்து பொருமப்படாது... டால்ஸ்டாய் சொன்னாப் போல, அனுபவம் ஒரு ஜன்னல் அதன் மூலம் தெருவைப் பார்க்கணும். ஜன்னலே தெருவாகிடப்படாது...’

தட்டுமுட்டுச் சத்தம் கேட்டு, அந்த மூவரும் வெளியே வந்தார்கள். ஆங்காங்கே இயங்கிக் கொண்டிருந்த பெண்களும் ஒன்றுபடப் போனார்கள். ஒவ்வொருவர் கண்களிலும் ஒரு ஆச்சர்யம். ஒவ்வொரு முகத்திலும் ஒரு சுழிப்பு...

அந்தக் கொட்டகை வாசலுக்கு வெளியே, ஒயர்பொருத்தப்பட்டTப்பில் இருந்துதுள்ளிய இன்ஸ்பெக்டர் சிங்காரம், அந்த கொட்டகைத்துண்ஒன்றில் சாத்தி வைக்கப்பட்ட சைக்கிளை பூட்ஸ் காலால் கீழே தள்ளினார். சிறிது நடந்து இன்னொரு பக்கம் கிடந்த நாற்காலியை எட்டிஉதைத்தார். இன்னும் நடந்து, ஒரு முக்காலியைத் தூக்கி விசிறியடித்தார். பேனராய் மாறிய ஒரு மூங்கில் தட்டியை இரண்டாக உடைத்துப் போட்டார். பக்கத்தில் புடை சூழ்ந்த கான்ஸ்டபிள்களைக் கம்பீரமாய் பார்த்துக் கொண்டார். பிறகு வலது கை பிடித்த லத்திக் கம்பு, இடது உள்ளங்கையை செல்லமாய் தட்டிக் கொடுக்க, அந்த மூவரை நோக்கி நடந்தபடியே கத்தினார்.

‘யோவ். டாக்டர்... ஒன் மனசிலே என்னய்யா நெனைப்பு...? வரச் சொன்னால், வர மாட்டியா? ஒன்னை இப்போ நாய்மாதிரி இழுத்துட்டுப் போகப் போறேன். இழுங்கடா... ராஸ்கலை,... போலீசா... மாமன் மச்சானா...? ‘

வலது பக்க இடுப்பில் துருத்திய உறையோடு நின்ற இன்ஸ்பெக்டரின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/287&oldid=635737" இலிருந்து மீள்விக்கப்பட்டது