பக்கம்:பாலைப்புறா.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம் 27

"ஆஸ்பத்திரி... எப்போ ரெடியாகும்...?”

"ஒரு வருஷத்துக்கு மேலாகும். கொஞ்ச நாளைக்கு சும்மா கிட... ஆஸ்பத்திரில பிறக்கிற முதல் பிள்ளை ஒன்பிள்ளையாத்தான் இருக்கணும்".

“ஆமாண்டி... கல்யாணமானவள்க எல்லார்க்கிட்டயும் சொல்லுங்க... ஒரு வருஷம் வரைக்கும் தம் பிடிக்கச்சொல்லுங்க”.

"ஏய்... கனகம்... என்ன பேச்சு பேசறே? பாம்படம் அறுந்து விழப் போவுது".

"சீனியம்மாமயினி... நீங்க ஒண்ணும் தம் பிடிக்க வேண்டாம்!”

வீடெல்லாம் சிரிப்பு. ஒரே சிரிப்பு. கலைவாணியின் அண்ணி குழல்வாய் மொழியும், சமையல் கட்டில் இருந்து, முகத்தைத் துடைத்தபடியே அங்கே வந்தாள். அந்தச் சிரிப்பில் கலந்து கொண்டு, மாமியாரிடம் இருந்து மரியாதைக்குரிய இடைவெளிபோட்டு உட்கார்ந்தாள். குறுக்கே பேசப் போன வாடாப்பூவை, கலைவாணி கையைத் தடுத்துவிட்டு, கண்டிப்பாய்ப் பேசினாள்.

"இனிமேல் யாரும் சிரிக்கப்படாது. சிரிக்கிறது மாதிரி பேசப் படாது, விழா நடக்க பாதிநாள்தான் இருக்குது. அந்தம்மா வெளிநாட்டுக்காரி... ‘கன்' டைமுக்கு வந்துடுவாங்க மொதல்ல தேனம்மா! நீயும், மீராவும் இந்த அழைப்பிதழ்களை வீடு வீடாய் கொடுத்துட்டு வாங்க. முன்னிலை வகிக்கிறவர்களுக்கு அவங்க பெயரை இந்த கவர்லே எழுதிக் கொடுங்க. சீக்கிரம்... ஒலியும் ஒளியும் அப்புறம். இந்தாங்க”.

"தேனம்மா, கலைவாணி நீட்டிய காகிதக் கட்டை, வேண்டா வெறுப்போடு வாங்கிக் கொண்டாள். மீரா எழுந்தாள், சிரிப்போடு எழுந்தாள்... இந்த பலராமன் வீட்ல சைட் அடிக்காட்டாலும், தெருவுலயாவது அடிக்கறானான்னு பார்ப்போம். தேறாத ஜென்மம்".

தேனம்மாவும், மீராவும் தெருவுக்குப் போவதை உறுதிபடுத்திய பின்னர், கலைவாணி காரியத்திற்கு வந்தாள்.

"இந்தம்மாவுக்கு யார்சால்வை போத்துறது...?"

"நீ எதுக்கு இருக்கே!"

"நான் வரவேற்புரை ஆற்றப் போறேன். ஒருத்தருக்கு ஒரு பொறுப்பு. ஒரு கெளரவம்தான் கொடுக்கணும்; கனகம் அத்தை - அந்தம்மாவுக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/27&oldid=1404956" இலிருந்து மீள்விக்கப்பட்டது