பக்கம்:பாலைப்புறா.pdf/303

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு.சமுத்திரம் 303

இந்த மனோகருடன், ஒரு குடிசையில் குடும்பம் நடத்துவதையும் தெரிந்து வைத்தவர்கள்தான். இவளைப் பார்த்தபடியே வாடாவா என்று கோரலா கேட்பவர்கள், இப்போது வாய் மூடிக் கிடந்தார்கள்.

இரண்டு நாட்களாக வீட்டுக்கு வராத மனோகரைப் பார்ப்பதற்காக அங்கே வந்த எஸ்தர், அந்தக் கூட்டத்தில் அவனை அங்கேயும் இங்கேயுமாய் தேடினாள். அவனுக்கு பத்து பதினைந்து நாளாக பலமான இருமல், கூடவே வயித்துப் பிழைப்பிற்காக வேலைப்பளு, எப்படி இருக்கானோ என்று பதைபதைத்து வந்தவள், அந்த கூட்டத்திடம் கேட்டாள்.

“எங்கே மனோகர்வர்லியா...? ஏன் பேசமாட்டக்கிங்கே...மனோ இங்கே வர்லியா?”

அவர்கள், எஸ்தரை கோபமாகவும், குமுறலாகவும் பார்த்தார்கள். அவன் திருட்டில், இவளுக்கும் பங்கு இல்லாமலா இருக்கும்?

‘மனோ என்ன ஆனான்? ஒருத்தராவது சொல்லுங்களேன்’

‘அவனோ, நீயோ, இனிமே இங்கே வரப்படாது”

‘சரி வர்ல. மனோ எங்கே? கோடிப்புண்ணியம்... சொல்லுங்க”

‘பலநாள் திருடன். ஒரு நாள் பிடிபடுவான். எவனோ அன்புமணி யாம். அவனோட சேர்ந்து, இவன் ஒரு கடையிலே தங்கச் செயினை திருடி இருக்கான். அதனால் போலீஸ்க்காரங்க... ரெண்டு பேருக்கும் இரும்பு காப்பு போட்டு இழுத்திட்டு போறாங்க... அன்புமணி, அப்ருவராகி அந்த போலீஸ்காரங்களை இங்கே கூட்டிட்டு வந்திட்டானா கடைசியிலே 6. ங்களுக்குத்தான்.அவமானமாப் போச்சு.’

எஸ்தருக்கு, முக்கால்வாசி புரிந்து விட்டது. அன்புமணி ஆறுமாதம் அவகாசம் கொடுத்ததே பெரிசு... அவனுக்குத் தெரியாமல் தலைமறைவு வாழ்க்கை நடத்தியும், அவன் கண்டு பிடித்து விட்டான். அந்த லாக்கர் நகை கைமாறுவது வரைக்கும் மனோகர் லாக்கப்பிலேயே இருப்பான்... இவன் கொடுக்க மறுத்து... அவர்கள் இவனை விடுவிக்க மறுத்து... ஏதாவது ஏடாகூடமாய் மனோகர் தற்கொலை செய்து கொண்டதாய் ஒரு ஜோடனை செய்து... கடவுளே... கடவுளே... ஒனக்கு கண் இருக்குதா... கடவுளே’

எஸ்தர், பக்கத்தில் நின்ற அசோக மரத்தில், முட்டி மோதினாள்... அந்த மரத்தோடு மரமாய்ச்சாய்ந்தாள். அதிலிருந்து அப்படியே வழுக்கி, மல்லாக்க விழுந்து, அப்புறம் குப்புறப் புரண்டு, பூமியின் வயிற்றுக்குள் போகப் போகிறவள் போல உடல் முழுவதையும் அங்குமிங்குமாய்ப்புரளவிட்டாள். தனக்குத்தானே குழிபறிப்பது போல் அல்லாடினாள்...

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/303&oldid=635757" இலிருந்து மீள்விக்கப்பட்டது