பக்கம்:பாலைப்புறா.pdf/304

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

304


அந்த விழிப்புணர்வு கொட்டகையும், சிறிது விழித்துப் பார்ப்பது போல் தோற்றம் காட்டியது. சாணித்தரை, சிமெண்ட் தளமானது. மண்ணும் கல்லுமாய் உள்ள சுவர்கள், ஆடைகளைப் போட்டுக் கொண்டன. கொட்டகைத் தளம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு, இடையே ஒரு வாசல் வந்தது. முன் பாதி அறையில், பேனர்கள், சுவரொட்டிகள் போன்ற தட்டுமுட்டுச் சாமான்கள்... பின்பாதி அறையில், பக்கவாட்டில் ஒன்றின் மேல் ஒன்றாய் வைக்கப்பட்ட பிளாஸ்டிக் நாற்காலிகள். இந்த அறையே, தேவைப்படும் போது, ஒரு ஆலோனைக் கூடமாகும்.

டாக்டர் அசோகன், எதிரே பிளாஸ்டிக் நாற்காலிகளில் உட்கார்ந்திருந்த சுமார் ஐம்பது பேருக்கு உபதேசம் செய்ய போனான். இதில் நாற்பது பேர் பெண்கள்; இந்த நாற்பதில் பதினைந்து பேர், சுமதியிடம் இருந்து கலைவாணியிடம் சேர்ந்த மனச்சாட்சிக்காரிகள்; பத்துப் பெண்கள், மத்திய அரசின் நேரு இளைஞர் மன்றத்தில் பகுதி நேர ஒருங்கிணைப்பாளர்களாய் பணியாற்றிவர்கள்; மாதம் எழுநூறு ரூபாய் சம்பளம் வாங்கியவர்கள்; இப்போது, சட்டப்படியான இரண்டாண்டு கால பதவிக்குப் பிறகு, மீண்டும் வேலையில்லாமல் போனவர்கள்; இவர்களை, கலைவாணிதான், இங்கே பிடித்துப் போட்டிருக்கிறாள்; மற்றும் பலர், சந்திராவின்துண்டுதலில் சந்தா செலுத்தியவர்கள். ஆண்கள். அசோகனின் வார்ப்புகள்.

அசோகன், பக்கத்து,நாற்காலியில் உட்கார்ந்தபடி, மேசையில் கையூன்றி, அதில் முகம் போட்டுக் கிடந்த கலைவாணியைப் பெருமிதமாய்ப் பார்த்துவிட்டு, பேச்சைத் துவக்கினான். அநாவசியமான. அவர்களே சொல்லாமல், நேரடியாய் வந்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/304&oldid=635758" இலிருந்து மீள்விக்கப்பட்டது