பக்கம்:பாலைப்புறா.pdf/305

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு.சமுத்திரம் 305

‘நல்லது நினைப்பவர்களுக்கு நல்லதே நடக்கும்... அதே சமயம், நல்லது, கெட்டது மூலம் வரலாம்... கெட்டது நல்லது மூலமும் வரலாம். டாக்டர்சந்திரா, நல்லது நினைத்தார். ஆனால் நடந்தது என்னமோ கெட்டது. சுமதி, கெட்டது நினைத்தாள். ஆனால், நல்லதே நடந்தது. இது போர் அடிக்கும் பேச்சுத்தான். ஆனாலும் உண்மை... நேர்மைக்கும், நெஞ்சில் உரத்திற்கும் வெற்றி கிட்டும் என்பதற்கு, கலைவாணியே எடுத்துக்காட்டு. கோவை தொழிலதிபர், தனிப்பட்டமுறையில் கொடுத்தஐந்துலட்சம் ரூபாய் நன்கொடையை, இந்த அமைப்பிற்கு, நன்கொடையாய் கொடுத்துவிட்டார். வழக்கமாய் எல்லோரும் செய்வது போல் செய்யாமல், இந்தப் பணத்தை நமது அமைப்பிற்கு சொத்தாக்கி, நமக்கும் உரிமை கொடுத்துவிட்டார். தயவு செய்து, கைதட்ட வேண்டாம். கைதட்டித்தட்டியே, பேச்சாளர்களை வெறும் கைத்தட்டலுக்காக பேசவச்சிட்டோம். அவர்களும் ஜோக் அடித்து அடித்தே, கூட்டத்தை ஜோக்கிற்காகவே வர வைத்துவிட்டார்கள். சரி விஷயத்துக்கு வாறேன்...”

‘இந்த விழிப்புணர்வு, அமைப்பு ஒரு வித்தியாசமான அமைப்பு. எய்ட்ஸ் திருமணத்தை தடுப்பதே, இதன் பிரதான நோக்கம். இதனாலேயே, இதற்கு பல திசைகளில் இருந்தும் எதிரிகள் முளைப்பார்கள். நாம் அடிபட வேண்டியது வரும். பிடிபட வேண்டியதும் வரும். ஆனாலும் நமது நோக்கம் நல்லதாக இருப்பதால், நல்லதாகவே நடக்கும். என்றாலும், நாம் குதிக்கிறதுக்கு முன்னாலகுனிந்து பார்க்கணும்.’

‘டாக்டர்... அசோகன் நீங்க இப்படியே பேசிட்டுப் போனால், நான் குனிந்து பார்க்காமலே, குதிக்க வேண்டியது வரும். என்ன இது? சப்ஜக்டுக்கு வராமல்...’

கலைவாணி மட்டும், கூட்டத்தின் சிரிப்பில் கலந்து கொள்ளவில்லை. களங்கமில்லாமல் சிரித்தவனைப் பார்த்தபடியே, சந்திராவைப் பார்த்தாள். இந்த டாக்டரம்மாவுக்கு, அசோக், எப்போ டாக்டர் அசோகன்.ஆனார்...?

அசோகன் தொடர்ந்தான்...

‘நீங்கள்லாம் எய்ட்ஸ் நோயாளிகளோட பழகப் போlங்க. அவர்களை எப்படி அணுகனும், எப்படிப் பழகனும் என்பதை என் அனுபவம் மூலம் சொல்கிறேன். முதலாவதாய், ஹெச்.ஐ.வி. வந்ததாய் தெரிஞ்சவங்க, அதை நம்ப மறுப்பாங்க, அப்புறம் அதிர்ச்சி அடைவாங்க... கோபப்படுவாங்க.. நம் மேல் எரிஞ்சி விழுவாங்க. கோவில், குளங்களோட பேரம் பேசுவாங்க... இதைப் புரிந்து, அவர்களை அணுகணும். எடுத்த எடுப்பிலேயே, அவர்கள் கருத்தை தவறானது என்று நிரூபிக்க முயற்சி செய்யப்படாது. இரண்டாவது கட்டமாய், இவங்க பயப்படுவாங்க... தனிமைப்படுவாங்க. தங்களை un. 20

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/305&oldid=635759" இலிருந்து மீள்விக்கப்பட்டது