பக்கம்:பாலைப்புறா.pdf/306

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

306 பாலைப்புறா

உதவாக்கரைன்னு தானாய் திட்டிக்குவாங்க. ஒரு சிலர், தனக்கு வநதது எல்லோருக்கும் வரட்டு முன்னு நினைப் பாங்க; கலைவாணி மாதிரி, சென்னை சேகர் மாதிரி, ஒரு சிலர்தான் ‘எனக்கு வந்தது யாருக்கும் வரப்படாதுன்னு நினைப்பாங்க, இந்த விதி விலக்குகளை விட்டுவிட்டு, பொதுப்டையா பார்த்தால் ஹெச்.ஐ.வி. நோயாளிகள், தனிமைத் துயரில் தவிப்பார்கள். இவர்களை அன்பாய் அரவணைத்து ‘நீங்க மட்டும் தனியா இந்த நோயை வாங்கல. உங்களை மாதிரி லட்சக் கணக்கானவங்க, உலகம் முழுவதும் ஊர்ஊராவும் இருக்காங்கன்னு சொல்லணும்...

“இளம் வயது நோயாளிகளை, வித்தியாசமாய் அணுகணும். மொதல்ல அவர்களை முழுமையாய் பேசவிடுங்க. அவங்க பேசுறதை நீங்க உன்னிப்பாய் கவனிக்கிறதாய், அவர்கிட்ட ஒரு அபிப்ராயத்தை ஏற்படுத்துங்க. இதுக்கு பாவலா பலிக்காது. முழுமையான ஈடுபாடும், விசுவாசமுமே முக்கியம். இவங்களோட வார்த்தைகளை மட்டும் கேட்காமல், இவங்களோட வார்த்தைகளில் இழையோடும் உணர்வுகளை மதியுங்கள். உங்களை அவங்க கிட்ட புரிய வைக்கிறதுக்கு முன்னால், அவங்களப் புரிந்து கொள்ளுங்க, ஒரு ஹெச்.ஐ.வி. இளைஞன் திருமணம் செய்ய போவதாய் சொன்னால், முதலில் அவனது எதிர்கால மனைவிக்கு ஏற்படுகிற கஷ்ட நஷ்டங்களை அடக்கி வாசித்து, அவனுக்கும் அவன் சந்ததிக்கும் ஏற்படப் போகிற அபாயத்தை எடுத்துச் சொல்லுங்க. பிள்ளை, பிறந்த உடனே இறக்கணுமா...? மனைவி ஒடிப் போகணுமான்னு கேளுங்க. இதையும் அவன் கேட்காவிட்டால், அவனை எச்சரியுங்க. இந்த எச்சரிக்கையை செயல்படுத்த, இருக்கவே இருக்குது... நம் அமைப்பு...’

‘கடைசியாய்... ஹெச்.ஐ.வி. முற்றின எய்ட்ஸ் நோயாளியை மரணத்திற்கு தயாராக்குங்க. மரணத்தை எதிர் நோக்கி, சொத்து, பத்து, குழந்தை, குடும்பம் போன்றவற்றை செட்டில் செய்யச் சொல்லுங்க. ஒரு எய்ட்ஸ் நோயாளியோட அவஸ்தைக்கு, மரணம் முற்றுப்புள்ளி வைக்கும் என்று சொல்லுங்க. கடைசிக் கட்டத்தில, கைகால் விழுந்தோ, ரத்தமாய் வாந்தியெடுத்தோ, குணப்படுத்த முடியாத சயரோகத்தில் தவித் தோ, கொப்புளம் கொப்புளமாய் வெடித்தோ...துள்ளத்துடிக்கக் கிடக்கிற எய்ட்ஸ் நோயாளிகளை, என்னோட மன்னிக்கவும், நம்மோட மருத்துவ மனைக்கு கொண்டு வாங்க...”

அசோகன், பேசிக் கொண்டே போனான். பேசி முடித்துவிட்டுப் பார்த்தால், கலைவாணியை காணவில்லை. அது, அவனுக்குப் பெரிதாகவும் தெரியவில்லை. பேச்சுக்கு பிறகு, கேட்கப்பட்ட சில சந்தேகங்களுக்கு சந்திராவையே விளக்கமளிக்கச்சொன்னான்...

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/306&oldid=635760" இலிருந்து மீள்விக்கப்பட்டது