பக்கம்:பாலைப்புறா.pdf/307

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு.சமுத்திரம் 307

ஆலோசனைக் கூட்டம் முடிந்ததும், சந்திரா அந்தப் பெண்களோடு பேசிக் கொண்டிருந்தாள். அசோகன், அலுவலக அறைக்குள் போனான். அங்கே

கலைவாணி, நாற்காலியில் உட்கார்ந்தபடி மேசையில் குப்புறக் கிடந்தாள். இரண்டு கரங்களும் மேசையில் வியாபித்துக் கிடந்தன. அந்த மேசையில், அவள் முகம் பதிந்த இருபக்கமும் ஈரம்... அவள் முதுகு குலுங்கியது... தோள்கள்ஆடின.

அசோகன், அவள் தலையைத் தொட்டு, ‘கலைம்மா’ என்றான். அப்படியும் நிமிராதவளை, முகம் பிடித்துத் தூக்கினான். கண்கள், ரத்தக் கட்டிகளைக் காட்டின. முகம் கழுவப்பட்டு, துவட்டப்படாத ஈரக் கசிவோடு இருந்தது. உதடுகள் பிதுங்கின.

‘கலைம்மா...’

கலைவாணி, அசோகனை, நிமிர்ந்து பார்த்தாள். அவன் கையைப் பிடித்துக் கொண்டு விம்மினாள்.

‘முப்பது வயதுக்குள்ளே... முடியப் போகிற நான்... கடைசி நேரத்தில என்ன பாடுபடப் போறனோ... என்னை இப்பவே மரணத்துக்கு ஆயத்தப்படுத்துங்க டாக்டரய்யா..! கடைசி நேரம் வரைக்கும் என்னை விட்டுப் பிரியாமல், நீங்களும் சந்திராக்காவும் என்னை வழியனுப்பி வைக்கணும் டாக்டரய்யா...’

வாசல் பக்கம் நின்ற சந்திரா ஓடிவந்து, கலைவாணி மேல் சரிந்தாள்; அசோகனைச்சாடினாள்.

‘இதுக்குத்தான் கலைவாணி... கிட்டே எய்ட்ஸ் வார்டை காட்டா தீங்கன்னு கரடியாய் கத்தினேன்...”

அசோகன், சந்திரா பேச்சைக்காதில் வாங்காதது போல், கலைவாணிக்கு ஆறுதல் சொன்னான்....

“என்ன கலைம்மா... குழந்தை மாதிரி நீ அழப்படாது. வழிகாட்டிகள் அழுதால், அப்புறம் வழியே அடைபட்டுடுமே. அழாதம்மா.... நீ வாழப் பிறக்கல்லன்னாலும், மற்றவங்களை வாழ வைக்கப் பிறந்தவம்மா! ராமலிங்க சுவாமியும் ஆதிசங்கரரும் விவேகானந்தரும் முத்துக்குட்டி சுவாமியும் சின்ன வயதிலேதான் இறந்தாங்க. இந்த மகான்கள் எவ்வளவு பெரிய பாரம்பரியத்தை, விட்டுட்டுப் போயிருக்காங்க... மரணம், எப்போது வருமுன்னு முன் கூட்டியே தெரிந்து வைத்த, இந்த மகான்கள் மரணத்தைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/307&oldid=635761" இலிருந்து மீள்விக்கப்பட்டது