பக்கம்:பாலைப்புறா.pdf/308

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

308 பாலைப்புறா

பற்றி கவலைப்பட்டிருந்தால், நம் பாரம்பரியம் என்ன ஆகியிருக்கும்’

“ஆமாம்... கலை... டாக்டர் அசோகன் சொன்னது மாதிரி... நீ மரணத்தைப் பார்த்து, அதுக்கு அடைக்கலம் கொடுக்கிற பெருமிதத்தில் சிரிக்கணும். பொதுவாய், எல்லோரும், ஒவ்வொரு நாளாய் சாகும் போது, நீ ஒவ்வொரு வினாடியாய் வாழ்ந்து காட்டணும்... அதோட, பத்து ஆண்டுகளுக்குப் பிறகு வருவதைப் பற்றி இப்போ ஏன் நினைக்கே?... அதுக்குள்ளே எய்ட்ஸ்க்கு மருந்து மாத்திரை கண்டு பிடித்துவிடலாம். இப்பவே ஆராய்ச்சி பலமாய் நடக்குது’

‘சந்திரா, கலைக்கு பிகாசில் கொடுத்தியா...?”

அந்த அலுவலக பீரோவைத் திறந்து, ஒரு காகிதக் கவரில் இருந்த மாத்திரையை எடுத்து, சந்திராவே, கலைவாணிக்கு ஊட்டுவதுபோல் அவள் வாயில் போட்டாள். பிறகு, மேசையில் நீரோடு நின்ற டம்ளரை, அவள்வாய் ஒரம் வைத்தாள்.

கலைவாணி, அவர்களைப் பார்த்து சங்கடமாய் சிரித்தாள். பிறகு ‘ரொம்பத்தான் லூட்டி அடிச்சிட்டேன்’ என்றாள் தலைகவிழ்ந்து. உடனே சந்திரா, அவள் கவிழ்ந்த தலையை நிமிர்த்தி “செயலாளரம்மா... இனிமேல் நீங்க.அழப்படாது’ என்றாள்படபடப்பான புன்னகையோடு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/308&oldid=635762" இலிருந்து மீள்விக்கப்பட்டது