பக்கம்:பாலைப்புறா.pdf/309

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

309

s

அந்த விழிப்புணர்வு வளாகத்திற்குள், அங்கு சங்கர் வருவதைப் பார்த்த அசோகன் “வாங்க. சங்கர்... என்ஆஸ்பத்திரிக்கு போயிட்டு தானே வறீங்க? நான் இங்கே இருப்பதாய் சொல்ல சொன்னேன். சொன்னாங்களா?”

சங்கரன், மேலும் கீழுமாய்த் தலையாட்டினான். சந்திராவையும், கலைவாணியையும் செத்த பாம்பாய் பார்த்தான். கலைவாணியைப் பார்த்த போது, கட்டுப் போடாமல் வீங்கிப் போயிருந்த பெருவிரலை, தன்னையமறியாமலேதுக்கிப் பார்த்தான்.

சங்கரனின் தோற்றத்தைப் பார்த்துவிட்டு, சந்திரா.ஆடிப் போனாள். கீழே விழுந்து விடலாம் என்று பயந்தவள் போல் நாற்காலிச் சட்டங்களைப் பிடித்துக் கொண்டாள். அவனைப் பார்த்து திகைத்துப் போன கலைவாணி, நாசூக்காக வெளியேறப் போனாள். சந்திரா தான், அவள் கையைப் பிடித்து இழுத்து, உட்கார வைத்தாள். அசோகன் உபசரித்தான்.

“உட்காருங்க மிஸ்டர் சங்கர்”

சங்கரன் உட்கார்ந்தான். அதே சமயம், தவியாய்த் தவித்தான். ‘அது’ இல்லாமல் இருந்தால், இந்த அசோகன் இந்நேரம் சொல்லி இருக்கலாம்... இருப்பதால்தான் சொல்லவில்லை என்று பாசிட்டிவ் பயத்தோடு அசோகனைப் பார்த்தான். பிறகு சோர்வாய் நாற்காலியில் சாய்ந்தான். முகம் வெளிறிப் போயிருந்தது. கன்னங்கள் சிறுத்துப் போயிருந்தன. முகத்தை மறைத்த தாடி... பழைய பேண்ட்... சட்டை தொளதொளப்பாய்க் கிடந்தன. அடிக்கடி வேறு இருமினான். உடலுக்குள் இருக்கும் அத்தனை உறுப்புக்க ளையும், வெளியே இழுத்துப் போடப் போவது மாதிரியான இருமல்...

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/309&oldid=635763" இலிருந்து மீள்விக்கப்பட்டது