பக்கம்:பாலைப்புறா.pdf/310

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31() பாலைப்புறா

சந்திராவால், சும்மா இருக்க முடியவில்லை. அவனே பேசட்டும் என்று இருந்தவள், இப்போது, தானாகவே பேசினாள்.

“எப்படித்தான் இருக்கீங்க... என்ன கோலம் இது... ஒரு லட்டராவது போடப்படாதா?”

சந்திராவுக்கு கண்ணிர் பொங்கியது. சங்கரனும் அவளிடம் பேசப் போனான். அதற்குள் இருமல்... ஈர இருமல்...

அசோகன், சங்கரனை கண்ணைச் சிமிட்டி பார்த்தான், பிறகு, அவன் கையைக் குலுக்கியபடியே, பேசினான்.

‘சமாச்சுட்டிங்க சங்கரன்... ஒங்க ரத்தத்தை ஹெச்.ஐ.வி.க்கு மட்டுமில்லாமல்... எல்லாவற்றுக்கும் சேர்த்து டெஸ்ட் செய்துட்டேன். கொஞ்சம் ஈஸ்னோ போலியா... அதுதான் இருக்குது... சாதாரண நோய்... நோயின்னு கூட சொல்ல முடியாது... மற்றபடி யுவர் பாடி இஸ் கிரேட்’

சங்கரனுக்கு ஒரு சந்தேகம். உடம்பு பிரமாதம் என்கிறானே... அப்போ மூளை இல்லை என்கிறானோ..? தட்டுத்தடுமாறிக் கேட்டான்.

‘அப்போ எய்ட்ஸ்?”

‘ரெண்டு தடவை டெஸ்ட் செய்தாச்சு. அது உங்களுக்கு கிடையவே கிடையாது. வீணாய் மனசைப் போட்டு அலட்டிக்காதீங்க...’

“அப்போ இந்த இருமல்”

‘இது ஈஸ்னோபோலியாவோட எபக்ட். மருந்து தாரேன். சரியாயிடும்...”

‘அப்போ இந்த ஜூரம் ஒரு மாதமாய் போகலியே”

‘லுக் மிஸ்டர் சங்கர்...! இதுக்குமேல் ஒங்களை நீங்கதான் காப்பாற்றிக்கணும். நாம்... என்ன நினைக்கமோ, அப்படி ஆகுறோம். சில பெண்கள், கர்ப்பம் தரிக்காமலே அப்படி ஆகி இருக்குமோ என்கிற பயத்திலேயே போலிக் கர்ப்பிணியாய் ஆகி இருக்காங்க. எங்கே எய்ட்ஸ் வந்திடுமோன்னு நினைச்சிங்கன்னா, ஹெச்.ஐ.வி. கிருமி இல்லாமலே, அதனோட விளைவுகள் உங்களுக்கு வரலாம்...’

சங்கரனுக்கு, லேசான தெளிவு... கூடவே பயம்... ஒரு வேளை இதுவரைக்கும் எய்ட்ஸ் இருப்பதாய் நினைத்ததால், அதன் விளைவுகள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/310&oldid=635765" இலிருந்து மீள்விக்கப்பட்டது