பக்கம்:பாலைப்புறா.pdf/311

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு.சமுத்திரம் 311

வந்திருக்குமோ இதனாலதான். இந்தப் பெருவிரல்...? கேட்டே விட்டான்...

‘அப்போ, ஏன் இந்த பெருவிரலோட வீக்கம் குறையல?”

‘காரணம் இருக்கு. கலைவாணிய, ஒரு ராட்சசியாய் நினைக்கிறீங்க... அதனால், அந்தக் கடிகாயமும் அரக்கத்தனமாய் தோணுது. இது ஒங்க மனம் சம்பந்தப்பட்டது. உடல் சம்பந்தப்பட்டது இல்ல... கலைவாணியை, நல்ல பெண்ணா மனசிலே நினைத்துப் பாருங்க. பெருவிரல் தானாய் ஆறிடும்... நிசமாவே, இது, பத்தரை மாற்று தங்கம்...’

சங்கரன், அசோகனை, மீண்டும் தடுமாற்றமாய்ப் பார்த்தான். ஒரு மாதமாய் இருக்கிற வயிற்றுப் போக்கு பற்றி கேட்கப் போனான். கேட்டால்... ‘என்னைப் பற்றியும் நல்லதா நினைன்னும் சொல்வான் ஆக, எய்ட்ஸைப் பற்றி நினைக்காட்டால்தான்... இந்த வயிற்றுப் போக்கு, முதுகிலே இருக்கிற ஒற்றைக் கொப்பளம் சுகமாகும். எப்படித்தான் நினைக்காமல் இருக்கப் போறேனோ..? மருந்தைக் குடிக்கும் போது குரங்கை நினைக்காதே என்கிற கதைதான்.

இதற்குள், சந்திராவும் அவனை உரிமைக் குரலில் சாடினாள்.

‘இத்தோட ஹெச்.ஐ.வி. சிந்தனையை விட்டுடுங்க... மெட்ராஸ்ல மாமா, அத்தை எப்படி இருக்காங்க? அவங்களாவது, ஒரு லட்டர் போட்டிருக்கலாம். சரி... சாப்பிட்டிங்களா? நம்ம வீட்டுக்குப் போனிங்களா... அம்மா ஏதும் தந்தாங்களா? இல்லாட்டால், இங்கேயே வாங்கிவரச்சொல்லலாம்’

சங்கரன், அவளைப் பார்த்து முதல் தடவையாகச் சிரித்தான். அவளே போதும் என்பதுபோல், சந்திராவை திருப்தியோடு பார்த்தான். அந்தச் சிரிப்பை, கலைவாணியின் பக்கமும் தாவவிட்டான். அந்தக் கிருமிகள் இல்லை என்பதில் ஒரு திருப்தி. ஆனாலும் அதை நினைத்தால், ரிசல்ட் ஒன்றுதானே என்பதில் இன்னொரு அதிருப்தி...

அசோகன், சந்திராவைப்பார்த்து விளக்கினான்;

‘எப்படி ஒங்க சங்கருக்கு... ஒங்களுக்குத் தெரியாமலே டெஸ்ட் செய்தேன்னு கேட்க மாட்டிங்களா டாக்டர்? போன வாரம் வந்திருந்தார். என்கிட்டயே வந்தார். எய்ட்ஸ் வார்ட்ல சேர்க்கச் சொன்னார். புனிதக் காதலனாய் ஒங்களைப் பார்த்துக்கிட்டேசாகனும் என்கிற ஆசை. நான்தான் அதை நிராசையாக்கி விட்டேன். இன்றைக்கு வாரதாய் நேற்றே லட்டர் வந்தது. நான்தான், ஒங்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி கொடுக்கிறதுக்காக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/311&oldid=635766" இலிருந்து மீள்விக்கப்பட்டது