பக்கம்:பாலைப்புறா.pdf/312

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

312 பாலைப்புறா

சொல்லலே... போகட்டும்... எனக்கும் கலைவாணிக்கும் இந்த அமைப்புக்காரர்களுக்கும் எப்போ கல்யாணச் சாப்பாடு போடப் போlங்க...?”

சந்திரா,கவைாணியைப் பார்த்தாள்.அவளோமுகத்தை வேறு பக்கமாகத் திருப்பிக் கொண்டாள். அசோகன் கல்யாணப் பள்ளுபாடினான்.

‘கல்யாணத்தை மெட்ராஸ்லே நடத்துனாலும், இந்தக் கோணச் சத்திரத்திலும் ரிசப்ஷன் வைக்கணும்... நம் சந்திரா ரொம்ப பாப்புலர். கூட்டம் பயங்கரமாய் இருக்கும். டாக்டர் சந்திராவை இந்த அமைப்பிலே இருந்து பிரிக்கிறீங்க... அதுதான் என் சங்கடம்... ஆனால் வாழ்க்கை பிரிவுகளையும் பிணைப்புக்களையும் கொண்டது. காதலும் ஒரு வகையான ஹெச்.ஐ.வி. கேஸ்தான். அது நிறைவேறலன்னா... உள்ளத்தை கரையான் அரிக்கிற மாதிரி அரிச்சிடுமுன்னு... சொல்றாங்க. அப்போ நான் உத்திரவு வாங்கிக்கவா. டாக்டர் சந்திரா இங்கயே இருந்தால் எப்படி...? மாப்பிள்ளையை வீட்டுக்குக் கூட்டிக்கிட்டுப் போங்க.”

அசோகன்... எழுந்தபடியே பேசினான்;

‘அப்புறம், மிஸ்டர்சங்கர் இந்த அமைப்போட ஒருதுண் ஒங்க சந்திரா. அதனால, இங்கே மாதத்துக்கு ஒரு தடவையாவது, அவங்களை அனுப்பி வைக்கணும். கொஞ்ச நாளைக்குத்தான். அப்புறம், இந்த அமைப்பு தானாகவே எழுந்து நிற்கும். சரி வாறேன்.”

அசோகன் போய்விட்டான்.

சந்திராவுக்கு, கோபங் கோபமாய் வந்தது. எப்படிக் கழித்துக் கட்டப் பார்க்கார். பழகுனதோசம் கூட இல்லையே... பழகுவதையே ஒரு தோசமாய் நினைக்கிறாரா? இந்த சங்கரை கல்யாணம் செய்யச் சொன்னதில் தப்பில்லைதான். ஆனால், எப்படியோ... நான் போனால் சரி என்பது மாதிரியா பேசறது? நான் எதுக்குப் போகணும்... இந்த அசோகன் யார்... எனக்கு உத்தரவு போட..? நீ, நான்னு பேசறவரு, இப்போநீங்க, நாங்கன்னு பேசுராறே. எப்படி பேசலாம்...

சந்திரா, தனக்குத்தானே பயந்தாள். தன்னைத் தானே புதிதாய் கண்டு பிடித்தது போல் மலைத்தாள். அசோகன் போன இந்த இரண்டு நிமிடமும், இந்த சங்கரன் பிரிந்திருந்த ஒராண்டுக்கும் மேலான பிரிவுத்துயராய்த் தோன்றுகிறது. இந்தக் கலைவாணி தன்னைத் திரும்பிப் பாராத நான்கு நிமிடம், நான்கு யுகங்களாகத் தோன்றுகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/312&oldid=635767" இலிருந்து மீள்விக்கப்பட்டது