பக்கம்:பாலைப்புறா.pdf/313

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு.சமுத்திரம் 313

சங்கரன் அவசரப்படுத்தினான்...

‘வீட்டுக்குப் போகலாமா சந்திரா... அப்புறம் நீ சஸ்பெண்டாமே.. கவலைப்படாதே. மெட்ராஸ்லே மேலிடத்துல பேசிட்டேன். நீ. ஒரு மன்னிப்பு லெட்டர் எழுதிக் கொடுத்தால் போதுமாம். வேலையில் சேர்த்துக்குவாங்க. அப்புறம், மெட்ராஸ்க்கும் டிரான்ஸ்பர் செய்வாங்க. எல்லாம் பொலிடிக்கல் பிரஷ்ஷர்தான். கொஞ்சம் பணமும்தான்...”

சங்கரன் நெஞ்சை நிமிர்த்திக் காட்டிப் பேசியபோது, அதுவரைக்கும், எதையோ எழுதுவது போல் கீழே குனிந்து பாசாங்கு செய்த கலைவாணி, சந்திராவை நேருக்கு நேராய்ப் பார்த்தாள். அவளோ, விழிகளைக் கூட உருட்டாமல் சலனமற்றுக் கிடந்தாள். கடந்தகாலத்திற்கும், நிகழ் காலத்திற்கும் இடையே போய்க் கொண்டும், வந்து கொண்டும் இருந்தவள், இந்த காலக்கட்டங்களையும் உதறிவிட்டு, இன்னது என்று சொல்லமுடியாத எதிர்காலத்திற்குள் போய்விட்டாள்...

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/313&oldid=635768" இலிருந்து மீள்விக்கப்பட்டது