பக்கம்:பாலைப்புறா.pdf/315

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு.சமுத்திரம் 315

நின்றிருக்கலாம்... நிற்கவில்லை... ‘'பட்டுன்னு வச்சது சரியாத்தான் தோணுது. கையில இருக்கிற பணத்தை பட்டுப் போகச்செய்யுதே’ என்றான். சந்திரா, அவனை எரிச்சலோடு பார்த்தாள்.

அந்தச் சமயம் பார்த்து ஆரம்ப சுகாதார நிலையத்திலிருந்து ஒரு ஆயா சேதி கொண்டு வந்தாள்... சஸ்பெண்டாகி இருக்கும் சந்திராவை விசாரிக்க, விசாரணை அதிகாரி, நெல்லையில் இருந்து வந்திருக்காராம்... இஷ்டப்பட்டால் விசாரணைக்கு உட்படுத்திக் கொள்ளலாம் என்று டாக்டர் முஸ்தபா சொன்னாராம்... சந்திராவுக்கு, பத்து நாட்களுக்கு முன்பு வந்த குற்றப்பட்டியலும், விசாரணைக்கு வரும்படி வந்த தாக்கீதும் நினைவுக்க வந்தன... அப்போது புறக்கணிக்க நினைத்தவள், இப்போது முசுடன் முஸ்தபாவின் மோசடிகளை, விசாரணை அதிகாரியிடம், ஒப்பிக்க வேண்டும் என்று தீர்மானித்தாள்... சங்கரன் அவளுக்கு உபதேசித்தான்... குற்றங்களை ஒப்புக் கொள்ளும்படி வாதித்தான். துர்போதனையால் அப்படி நடந்து கொண்டதாக மன்னிப்பு கேட்கச் சொன்னான். இதனால், சென்னைக்கு அவளை முழு டாக்டராக கொண்டு போகும் தன் பணியில் சிக்கல் இருக்காது என்றான். உடனே சந்திராவெகுண்டாள். நற்போதனையால்தான்.அப்படி நடந்து கொண்டேன்...எப்படி வாதாடணுமுன்னு எனக்குத் தெரியும்” என்றாள்... அம்மா ‘கட்டிக்கப் போறவனை இப்படியா எடுத்தெறிந்து பேசு வறது என்ற போது, சந்திராவின் பார்வை சூடானது. அதே சமயம் விடுங் கத்தே... இப்படிப் பல தடவை எடுத்தெறிந்து பேசியிருக்காள்; ஆனாலும், இந்த ராட்சசியை’ என்னாலே மறக்க முடியலியே, என்று சொல்லிச் சிரித்தான். சங்கரன்; எரிந்து நின்ற சந்திரா மெழுகாய் குழைந்தாள். தனக்கு வேண்டியவன் சங்கரனே என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டு, எங்கேயோ தூக்கி எறிந்த வெள்ளைக் கோட்டை தேடுவதற்காக வீட்டிற்குள் போனாள்...

அந்த சுகாதார நிலையத்திற்கு, டாக்டர் சந்திரா வந்த போது, இரவுக் காவலாளி மட்டுமே இருந்தார். ஏதோ ஒரு அரசாங்க கடனுக்காக, இன்சார்ஜ் டாக்டர் முஸ்தாபாவின் மோவாயை தாங்குவதற்காக முன் கூட்டியே வந்து விட்டார். சந்திராவைப் பார்த்ததும், ஒப்புக்கு கைதுக்காமல், ஒப்புதலாய் கும்பிட்டுவிட்டு விவரம் சொன்னார்.. டாக்டர் முஸ்தாபா, அரைமணி நேரத்திற்கு முன்பே விசாரணை அதிகாரியை கூட்டிக் கொண்டு போய்விட்டாராம். இவள் வரமாட்டாள் என்று அடித்துச் சொல்லி ஏதோ ஒரு விடுதிக்கு அழைத்துப் போயிருக்கிறாராம்.

‘'எக்பார்ட்டே என்னமோ ஒரு இழவாமே. அப்படி ஒங்கலாளடிஸ்மிஸ்

செய்யப் போறாங்களாம்”, என்று சொல்லிவிட்டு, காவலாளி கண்ணிர் சாட்சியாய் விம்மினார்... அவர் கைகளை எடுத்து, கண்களில் ஒற்றிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/315&oldid=635770" இலிருந்து மீள்விக்கப்பட்டது