பக்கம்:பாலைப்புறா.pdf/316

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

316 பாலைப்புறா

கொண்ட சந்திரா, தன்னை ஆசுவாசப்படுத்திக்கொள்வதற்காக,தனது பழைய இருக்கையில் உட்காரப் போனாள்..பிறகு,அதன் எதிரேஉள்ளேநோயாளிப் பெஞ்சில் உட்கார்ந்தாள்... ஐந்து மணிக்கு வர வேண்டியவள்தான்... சங்கரனின் உபதேசத்தாலும், வெள்ளைக் கோட்டை தேடியதாலும், கால்மணி நேரம் தாமதமாகிவிட்டது. ஆனாலும், விசாரணை அதிகாரி சட்டப்படி ஆறுமணி வரை காத்திருக்க வேண்டும்... அதுதான் சாக்கு என்று போய்விட்டார். இதோ, இந்த காவலாளிப் பெரியவரைசாட்சியாக வைத்து, மேலதிகாரிக்கு மனுப் போடலாம்... ஆனாலும், பயன் இல்லை... ஒரு முகமூடியை, முகமே அற்றுப் போன இன்னொரு மூடி விசாரிக்கும்... தீர்ப்பளித்துவிட்டு, விசாரிக்கும்...இப்போது இதுவல்ல பிரச்சினை...

டாக்டர் சந்திராவிற்கு, மீண்டும் கோழியா முட்டையா என்ற குழப்பம் வந்தது... அந்தக் குழப்பத்தில் சுயமரியாதை குறைந்தது போல், தன்னை மேலும் கீழுமாகப் பார்த்துக் கொண்டாள்... ஒருத்தி, ஒருவனை நினைத்து விட்டால், அவனை, ஆயுள் வரைக்கும் மறக்கமாட்டாளாம்... இதுதான் தமிழ் பண்பாடாம்... ஆனால் ‘சங்கரனிடம் நிலைத்த என் மனம் அசோகனிடம் ஏன்தாவுகிறது... நான்சஞ்சலக்காரியோ... சந்தர்ப்பங்களுக்கு ஏற்ப நடப்பவளோ... சீ.சீ... நினைக்கவே வெட்கமாக இருக்குதே...”

“இதில் வெட்கப்பட ஏதுமில்லை... சங்கரன் மீது கொண்ட நேயம் உறவின் அடிப்படையிலானது... அவனுக்கு இவள்... இவனுக்கு அவள் என்று சின்ன வயதிலேயே பெரியவர்கள், அவள் அடிமனதில் பதித்த முடிச்சு... இதை வெளிமனம் அவிழ்க்கப் பார்க்கிறது... இதுதான் பிரச்சினை... ஆனால் அசோகனிடம் ஏற்பட்டபிடிப்பு, காலம் கணித்த தத்துவார்த்த நேயம்... காதலிப்பது தெரியாமலேயே காதலித்து நேயம்...

‘இருக்கலாம்தான்... ஆனாலும், இந்த சங்கரனை உதறுவது எந்த வகையில் நியாயம்? ஏற்கெனவே, பெருவிரலைப் பிடித்துக் கொண்டு, பாதி மனோ நோயாளியாய் ஆகிப் போனவர். ஆயிரம் நடந்தாலும், தன்னை மனதார நேசிப்பவர். அவருக்கு மனைவியாய் இருந்து, ஒரு மருத்துவச்சி யாய், அவரது பெருவிரலைப் பிடித்த பிரச்சினையை படிப்படியாய் தீர்க்க வேண்டும்... அதோடு, திருமணம் என்பது ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் மட்டும் நடக்கும் உறவல்ல. ஒவ்வொரு திருமணமும், இரு குடும்பங்களுக் கான இணைப்புப் பாலம்... ஆயிரம்தான் இருந்தாலும், அசோகன் அந்நியன்,... அவன் மீது இவள்தான் ஒரு தலைராகம் பாடுகிறாள். அதோடு அம்மாமுக்கியம்... தாய்மாமாமகன் சங்கரன்தான், அம்மாவை மாமியாராக வெறுத்தாலும், அப்பாக்கூடப்பிறந்த அத்தையாக அரவணைப்பார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/316&oldid=635771" இலிருந்து மீள்விக்கப்பட்டது