பக்கம்:பாலைப்புறா.pdf/317

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு.சமுத்திரம் 317

“சரிதாண்டி. சங்கரனைநல்லவனாக்குவதற்காக, உனக்கு தோன்றாத் துணையாய் நிற்கும் அசோகனை அந்நியமாக்குவதா...அவர்மீது நம்பிக்கை இழப்பதா... திருமணம், இரு குடும்பத்தின் இணைப்பு என்றால், அசோகனோடு நடக்கும் திருமணம், பல குடும்பங்களை இணைக்கும் சமூகப் பாலம்... கோழியான அசோகனா... முட்டையான சங்கரனா...

பேசாமல் திருமணமே செய்து கொள்ளாமல் இருக்கலாம்... எப்படி முடியும்... ஆரம்பத்தில் வீறாப்பாய் திருமணம் செய்யாமல், கடைசி காலத்தில் அவஸ்தைப்படும் எத்தனை பெண்களைப் பார்த்தாச்சு... கழுதை வயசாகிறது... இருவரில் ஒருவரைத் தேர்ந்தெடுத்தாக வேண்டும்... கலைவாணியோடு கடைசி வரைக்கும் இருந்து கழுவாய் தேட வேண்டியது அவசியம்... ஆனாலும் அம்மா... அவளை வளர்த்து - வார்த்தெடுத்த தாய் மாமா, அவர்களது நம்பிக்கையை பொய்ப்பிக்கலாமா... அதே சமயம் தாட்சண்யம் கருதி, திருமணம் செய்வது வெறுமணம் அல்லவோ... என்ன செய்யலாம்...

எத்தனையோ பேர், தன் தலையை உருட்டிய போதும், அதை தாங்கிக் கொண்ட சந்திரா, இப்போது தன்தலையைத்தானே, உருட்டிக் கொண்டாள்... அனுதாபத்தை காதலாக அனுமானிக்க கூடாது... அதே போல், மரியாதை உணர்வை, காதலாக மதிப்பிடக் கூடாது... காதலை, கண்களில் தேடாமல், இதயத்தில் தேட வேண்டும்... ஒருவருக்கு, ஒரு இதயம்தான் உண்டு... காதலைப் பொறுத்த அளவில், அதில் பைபாஸ் சர்ஜரி கூடாது....

டாக்டர். சந்திரா, வெறும் சந்திராவாய் சிந்தித்து சிந்தித்து, சிந்தனை அற்றபோது, மருத்துவமனை தொலைபேசி அலறியது... நமக்கேன் வம்பு என்பது போல் சந்திரா சும்மாவே இருந்தாள்... ஆனாலும், விசாரணை அதிகாரி, மனச்சாட்சி போதையில், தொலைபேசியில், தான் வந்திருப்பதை உறுதி செய்ய நினைத்திருக்கலாம்...

சந்திரா, டெலிபோனை எடுத்தாள்...

‘சங்கரன் இருக்காரா...

‘இல்லை நான் அவரோட அத்தைப்பொண்ணு * *

‘சந்திரா பேசுறேன்... நீங்க யாரு...”

‘என்ன வேணும்?”

‘நான் சென்னையிலிருந்து பேசுறேன்... சங்கரோட, கம்பெனி சகா;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/317&oldid=635772" இலிருந்து மீள்விக்கப்பட்டது