பக்கம்:பாலைப்புறா.pdf/318

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

318 பாலைப்புறா

பெயர் கார்மேகம்... அவனோட, நான், இப்போ பேசியாகணும்; அவசரத்துக்காக இந்த நம்பரைக் கொடுத்தான்... பாவிப்பயல் எங்கே போயிட்டான்...’

“எங்கேயும் போகல கோயிலுக்குத்தான் போயிருக்கார்... திரும்புறதுக்கு ஒரு மணி நேரம் ஆகும். ஒங்க டெலிபோன் நம்பரைக் கொடுங்க... அவரைப் பேசச் சொல்றேன்... இஷடப்பட்டால், என்கிட்ட சேதி சொல்லலாம்...”

‘முக்கியமான சமாச்சாரம்... அவன்கிட்ட மட்டுமே பேச வேண்டிய விவகாரம்...”

‘ஒங்கள விட, அவர் மேல, எனக்கு அதிக அக்கரை உண்டு... ஆபத்துக்கு தோசமில்ல. சொல்லுங்க...”

‘சொல்றேன் மேடம்... மனோகருக்கு எய்ட்ஸ் வந்துருக்கிறதாய், அமெரிக்க ஏர்போர்ட்டுக்கு, சங்கரன்தான், தகவல் கொடுத்ததானாம். கம்பெனி விசாரணையில் தெரிய வந்திருக்குதாம். இதனால, கம்பெனி, சங்கரனைசஸ்பெண்ட் செய்திருக்கு... ஆர்டர் கையெழுத்து ஆகிட்டு... அது டெஸ்பாட்ச் ஆகுமுன்னால, அவனைஏதாவது செய்யச்சொல்லுங்க”

டாக்டர்சந்திராவுக்கு மனம் லேசானது; ஆனால்தலை கனத்தது...

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/318&oldid=635773" இலிருந்து மீள்விக்கப்பட்டது