பக்கம்:பாலைப்புறா.pdf/319

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.19

7

திருச்சி வானொலி நிலையத்தின் பகல் இரண்டு பத்து மணி செய்திகள். புதுடில்லியில் கூடியிருக்கும் என்.டி.திவாரி, அர்ஜுன்சிங் ஆகியோரின் போட்டிக் காங்கிரஸ் கூட்டம் பற்றி தெரிந்து கொள்ள, ஆங்காங்கே சின்னச் சின்னக் கூட்டங்கள். ஆனாலும், அதைப் பற்றி ஒரு வார்த்தை இல்லை. மாநிலச்செய்திகள் என்பதால், செளகரியமாய்ப் போயிற்று- வானொலிக்கு,

எஸ்தர், இரண்டு கைகளிலும் மனோகரை ஏந்திக் கொண்டு, கோணச்சத்திரம் ரயில் நிலையத்திற்கு வெளியே வந்தாள். அவளுக்கு, அவன் பெரிய சுமையாகத் தெரியவில்லை. ஒரு காலத்தில், எழுபது கிலோவாக இருந்தவன், இப்போது இருபத்தைந்தாக சுருங்கிக் கிடந்தான். ஆனாலும் அவன் கண்களில் மட்டும் ஒரு பிரகாசம். அந்த இடத்தை அடையாளம் கண்டது போன்ற தலையாட்டல்.

எஸ்தர், சுற்றும் முற்றும் பார்த்தாள். அவள் தோள் வழியாய் தொங்கிய ஜோல்னாப் பை, அவளின் முட்டிக்கால்களின் முன்னால் முட்டுக்கட்டை யானது. உடனே அவள், முதுகில் உட்காரும் காகங்களை விரட்ட, மாடு ஒரு வளைவு வளையுமே, அப்படி லாவகமாய் வளைந்தாள். ஜோல்னாப்பை, பக்கவாட்டில் போனது...

அந்த நிலையிலும், மனோகரின் கண்கள் அங்குமிங்குமாய் பிடிப்போடு பார்த்தன. அந்த இடத்தில் ஏற்பட்ட மாற்றங்களைள, அதிசயித்துப் பார்த்தன. அசல் பொட்டல் மேடாய் இருந்த இதே இடம், இப்போது முடிசூடிக் கொண்டிருந்தது. அதுவும் சுருட்டை முடியாய்... இதே ரயில் நிலையத்திற்கு முன்னால் நின்ற பதினைந்துக்கும் குறையாத வில்வண்டிகள் இரண்டாய்க் குறைந்தன. ஆனாலும், அவை விசாலமாய் நின்ற இடத்தில், நான்கைந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/319&oldid=635774" இலிருந்து மீள்விக்கப்பட்டது