பக்கம்:பாலைப்புறா.pdf/320

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

320 பாலைப்புறா

வெள்ளை நிறக்கார்கள்... அத்தனையும் நாசூக்கான வாடகைக்கார்கள்... நாசூக்கு இல்லாத மீட்டர்களை காட்டிய கறுப்புக்கார்கள்... நான்கைந்து ஆட்டோக்கள்... பக்கத்திலேயே இரண்டு பெரிய வேன்கள்... விதவிதமான ஆட்கள் ஏறுவதைப் பார்த்தால், அந்த வேன் அநேகமாய் ஏழைகளின் வாடகை வாகனமாக இருக்க வேண்டும். தலைக்கு இவ்வளவு என்று நிர்ணயித்து, ஏறுகிறவர்களை ஊர்ஊராய் இறக்கிவிடும் சாதனமாக இயங்க வேண்டும். இதன் அருகேயே லவகுசாமாதிரி ஒரு ஜெராக்ஸ், ஒரு பி.சி.ஒ. நிலையம். ஜெராக்ஸ் கட்டிடம் வெள்ளை கண்ணாடியாலும், பொது தொலைபேசி மையம் உள்ளே எதையும் காட்டாத பச்சைக் கண்ணாடி யாலும் பளபளத்தன. இவற்றின்அருகேயே, ராமலட்சுமணர்போல்ஆடியோ வீடியோ அலங்காரக் கூடம். அங்கே ஒரு கானாப் பாட்டு. தொலைவில் ஒலைகட்டியிருந்த பள்ளிக்கூட இடத்தில், இப்போது.இரண்டடுக்கு மாடிக் கட்டிடம்... நாற்றம் பிடித்த ஒரு குட்டை நிரப்பப்பட்டு, அதில் கம்ப்யூட்டர் பயிற்சிப் பள்ளியாம். அதன் சுவரில் எய்ட்ஸ் விழிப்புணர்வு ஒட்டம்... துவக்கி வைப்பவர்மாவட்ட சுகாதார அதிகாரி.

மனோகர், தனக்குள்ளயே பேசிக் கொண்டான். ‘நாடு முன்னேறிவிட்டது. ஆனால், நாட்டு மக்கள்தான் முன்னேறல. கிராமத்துக்கு விஞ்ஞானம் வந்து விட்டது. கூடவே எய்ட்ஸ்ஸும் வந்துவிட்டது. ஆனாலும் உற்றார் உறவினரைப் போல் அல்லாமல், இந்த எய்ட்ஸ் கிருமிகள் நல்லவை. இந்த வகை நோயாளி இறக்கும் போது, அவனோடு கூடவே இறந்து போகிறவை... உடன் பிறப்புக்களைவிட, ஒரு படி உயர்ந்து போன உடன் இறப்புக்கள்’

மனோகர், வெறுமையாகத் தலையாட்டியபோது, அவனைச் சுமந்து நின்ற எஸ்தர் வாகனங்களை நோட்டமிட்டாள். இதற்குள், அவர்கள் இருவரையும் கும்பல் கும்பலாய்ப் பார்த்தார்கள். சிலர், அவள் கையில் கிடப்பவனை அடையாளம் கண்டது போல், ஒரு காலாட்சபமே, நடத்தினார்கள். மற்றவர்கள், அந்த எலும்பு பிரேமை - படம் சுருங்கிய சட்டத்தை அறுவெறுப்பாகவும், அனுதாபத்தோடும் பார்த்தார்கள். கழுத்துப் புண்ணில் நீர்க்கசிவு. காதோரம் செம்படை. ரத்தத் திட்டுக்களால்ய்த் தெரிந்த பைஜாமா... லேசாய் ஊதிப் போன வயிறு. எம்மாடி... மனுஷன் இப்படில்லாம் ஆக முடியுமா?

எஸ்தர் நடந்த போது, மனிதாபிமானிகள் கண்களை மூடிக் கொண்டார்கள். மற்றவர்கள் விலகிக் கொண்டார்கள்... அவள், ஒரு ஆட்டோவைப் பார்த்து நகர்ந்தபொழுது, அது பயந்து போய், ஒடி வேறு இடத்தில் நின்றது. உடனே அவள், ஒரு வெள்ளைக்காரைப் பார்த்தபோது வெளியே நின்ற டிரைவர் சிறிது விலகிப் போய் நின்று, அவளை முறைத்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/320&oldid=635776" இலிருந்து மீள்விக்கப்பட்டது