பக்கம்:பாலைப்புறா.pdf/321

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு.சமுத்திரம் 321

வேன் பக்கம் போனாலோ, அதில் ஏறியவர்களில் ஒரு சிலர் தவிர, எஞ்சியவர்கள் இறங்கப் போனார்கள். நடத்துனர் பையன் கத்தினான். ‘இறங்காதிய... இறங்காதிய... அந்த ஆளை ஏத்த மாட்டோம் என்றான். இறங்கப் போனவர்கள், இருக்கையில் உட்கார்ந்தார்கள். அதுவும், அய்யோ பாவம்’ போட்டபடி...

எஸ்தர், மனோகரை... ஒரு குலுக்கி, குலுக்கி மார்போடு நெருக்கமாய் சாத்தியபடியே, திடுக்கிட்டாள். நல்லவேளையாக, இவர்களைப் போல், ரயில் பயணிகள் புறக்கணிக்கவில்லை. அது ரிசர்வ் செய்யப்படாத பெட்டி என்பது ஒரு காரணம். இவனுக்கு எய்ட்ஸ் இருப்பது தெரியாதது இன்னொரு காரணம். ஒரு வேளை தெரிந்திருந்தால், நடுக்காட்டில் சங்கிலியை இழுத்துக் கூட, ரயிலைநிறுத்தி இருக்கலாம்

எஸ்தர், என்ன செய்வது என்று புரியாமல் நின்றாள். இப்போது கைகூட வலித்தது. மூன்று கிலோமீட்டர் தொலைவில் இருப்பதாக மனோகர் கூறிய அவன் கிராமத்திற்கு நடந்தே போகலாமா என்ற வேகம். அந்த வாகனங்களையும், வாகனக்காரர்களையும் விட்டு விலகி நின்றாள். பிறகு, அருகே உள்ள ஒரு கப்பிச்சாலை பக்கமாய்ப் போனாள். அந்தப் பக்கமாய், ஒரு வண்டி வந்து கொண்டிருந்தது. பைதா எனப்படும் மரச்சக்கரங்களைக் கொண்ட கட்டை வண்டி. கமிஷன் மண்டியில், பல்லாரி மூட்டைகளையும், மல்லிக்குழைகளையும், தக்காளி கூடைகளையும் இறக்கிவிட்டு வரும் வண்டியாக இருக்கலாம்...

எஸ்தர், கெஞ்சினாள்...

‘பெரியவரே... எவ்வளவு பணமுன்னாலும் தாரேன். இவரை வெள்ளையன்பட்டி வரைக்கும் கொண்டு போகணும்...”

‘சரி வண்டில ஏத்து.. அதான் சொல்லிட்டேனே... பிறகு ஏன் அழுகிறே?”

“அழுது அழுது கண்ணீர்லே கண்ணே கரைஞ்சிப் போச்சு... எதுக்காக அழுவுறேன்னு எனக்கேத் தெரியல. ஒங்களை கையெடுத்துக் கும்பிடணும் போல இருக்குது.”

‘இதுல என்னதாயி இருக்குது... இப்படி எனக்கே ஆயிட்டால், என்னைத் தூக்கிப் போடவும், ஆண்டவன் ரெண்டு பேரை அனுப்பணும்பாரு... இவர் யாரு...?”

‘வெள்ளையன்பட்டி மனோகர்....”

‘சுப்பையாமுதலாளியோடமருமகனா..? அடக்கடவுளே...” tiir. 21

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/321&oldid=635777" இலிருந்து மீள்விக்கப்பட்டது