பக்கம்:பாலைப்புறா.pdf/322

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

322 பாலைப்புறா

வண்டிக்காரர், எஸ்தர் ஏந்திய மனோகரை, தன் வண்டியில் கிடத்தினார். தக்காளிக் கூடைகளை வைப்பதற்காக வைக்கோல் பரப்பப்பட்டு, அதற்குமேல் ஒலைப்பாய்கள் விரிக்கப்பட்டிருந்த மெத்தை போன்ற மேல் பரப்பு.

வண்டிச்சக்கரம், காலச்சக்கரம் போல் சுழன்றது.

வண்டிக்காரர், இடுப்புக்குமேல் எதுவும் இல்லாமல் இருந்தார். அறுபது வயது இருக்கலாம். இன்னும் துருப்பிடிக்காத இரும்பு. நொந்து போய் நட்ந்த கிழட்டுமாடுகளை, ‘இம்மா இம்மா என்று செல்லமாய் அதட்டினார். மனோகரைப் பின்னால் திரும்பப் பார்த்தார். மனமும் கேட்கவில்லை.. கண்களும் கேட்கவில்லை. பல வருவுங்களுக்கு முன்னால. எப்போன்னு சட்டுன்னு வரமாட்டக்கு... எல்லா ஊர்பயலுவளுக்கும் செய்யுறது மாதிரி, இவனைப் பார்த்ததும், தோளில் கிடந்த துண்டை எடுத்து இடுப்பில் கட்டினார். ஆனால் இந்தப் பையன், ஊர்லே மனுஷன் இருக்கானோ... இல்லியோ... நீங்க மனுஷன் என்று சொல்லி, இடுப்பில் கிடந்த துண்டை எடுத்து தோளில் போட்டான். அதற்கு பிறகு இவர் துண்டு போடுவதே இல்லை... போட்டால்தானே ஊரானுக்கு தோள்துண்டு, இடுப்பு பெல்டாகும்... இது மட்டுமா? எப்போ பார்த்தாலும் ‘மூக்கையா.. மூக்கையா...! உங்க கடைக்குட்டிப்பையன் நல்ல பையன்... நல்லா படிக்க வையுங்க. அவன் வேலைக்கு நானாச்சு'ன்னு சொன்ன பையன். ஏதோ ரகசியமான நோயின்னு பேசிக்கிட்டாங்க. பாவம், அப்பன் தவசிமுத்து வோட பாவ காரியங்கள், மகனை முடக்கி போட்டுட்டு... பிள்ளையோட புண்ணியத்தையும் மீறி, அப்பனோட பாவம் அவ்வளவு பெரிசா இருக்குது.’

வெயிலில் மனோகர் தவித்தான். கூடாரம் இல்லாத கட்டை வண்டி... இருபக்கமும், பூவரசு கம்புகளால்தான் பொருத்தி வைக்கப்பட் டிருந்தன. ஒரு சேலையை மட்டும் மேலே போட்டால், அதுவே பாடை...

உள்பாடி போட்டிருந்த எஸ்தர், அவன் மேல் போர்த்துவதற்காக மானத்தைப் பற்றிக் கவலைப்படாமல், சட்டையைக் கூட கழட்டப் போனாள். அதற்குள், மூக்கையா பார்த்து விட்டார். அவரும் கோவணம் கட்டுவதில் இருந்து, டவுசர் அளவிற்கு முன்னேறியவர். வேட்டியை உருவி எஸ்தரிடம் கொடுத்தார். ‘நல்லாபரப்பி போடு தாயி என்றார்.

மூக்கையா, ‘முடியலியே என்பது மாதிரி திரும்பிப் பார்த்த மாடுகளை, நோட்டமிட்டார். அதற்குள், அந்த மாடுகள் மூக்கணாங் கயிற்றைப் பிடித்து இழுக்க வேண்டிய அவசியம் இல்லாமலே நின்றன. அவர் யோசித்தார். ஒரு வேளை, செடி செத்தை பாம்பு இருப்பதால் இப்படி பம்மி நிற்குதா என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/322&oldid=635778" இலிருந்து மீள்விக்கப்பட்டது