பக்கம்:பாலைப்புறா.pdf/323

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு.சமுத்திரம் 323

பார்த்தார். அப்படியும் தெரியவில்லை. சாட்டைக்கம்பால், ஒரு சின்ன் விளாசல். ஒடிய மாடுகள் ஒரு இடத்தில் போய், மீண்டும் சத்தியாக்கிரகம் செய்தன. அவர், மனோகர் பக்கமாய் திரும்பினார். லேசான வாடை.. மாடு மூக்கு, அவர் மனித மூக்கைப் போல்மரத்துப் போகவில்லை.

மூக்கையா, செல்லப்பிள்ளைகளான அந்த மாடுகளை, முதல் தடவையாக, அவைகளுக்கு வலி கொடுக்கும் அளவிற்கு அடித்தார். அவர் கையில் பிடித்த சாட்டைக் கம்பு, பாம்பு போல் சுருண்டும் நீண்டும் சீறிப் பாய்ந்தது. மாடுகளுக்கும் ரோஷம். நீயே மூக்கணாங் கயிற்றை சுண்டி இழுக்கப் போகிறே பார் என்பது மாதிரி ஓடின.

அந்தக் கட்டைவண்டி, இப்போது ஓங்கிப் பெருத்த அந்த பிரசவ மருத்துவமனை சாலை வழியாக, வெள்ளையன் பட்டியின் விலாப்புறத் திற்கு வந்தது. மருத்துவமனை வந்ததாலோ என்னமோ, சில நஞ்சைப் பகுதிகள் கூட பிளாட்டுக்களாக, வெள்ளைக் கற்களைக் காட்டின. சில, குட்டிப் பங்களாக்களாய் வடிவெடுத்திருந்தன; எஸ்தர் யோசித்தாள். மனோ சொன்னானே... கலைவாணி கருத்தரித்த மருத்துவமனை என்று. அது இதுதானோ? இங்கேயே, இவனை சேர்க்கலாமா? மொதல்ல இவன் iட்டுக்குப் போகலாம்...

இந்த வண்டி, பள்ளிக்கூட மைதானம் வழியாய்ப் போகவில்லை. சுற்றிலும் மதில் மாதிரியான காம்பவுண்ட். போனால் போகிறது என்பது போல், போட்டுவைத்திருந்த, அதன் பக்கத்து வண்டித்தடம் வழியாகப் போனது. நார்க் கட்டிலில், கம்பளிப் போர்வைக்கு மேல் கிடந்த “லாரிக்கார’ மாரியப்பனால் ஏறிட்டுக் கூட பார்க்க முடியவில்லை. கண்கள் இருந்த இடத்தில் குழிகள்... கைகால்கள் இருந்த இடத்தில் வெறும் குச்சிகள். அவன் பக்கமாய் நின்ற வாடாப்பூதான், அந்த வண்டியைப் பார்த்தாள். உடனே என் ராசாவே ராசாதி ராசாவே’ என்று புலம்பிப்புலம்பி, தலையில் அடித்தபடியே அந்த வண்டியைப் பார்த்து ஓடினாள். அவளை, மாரியப்பன் திட்டப் போனான். உதடுகளை அசைக்கவே முடியவில்லை. பின்னால் துரத்தப் போனான்..., கால்கள் நகரவில்லை... ஆனாலும் அசைந்தான். அப்படி அசைய அசைய முதுகுக் கொப்புளங்கள் வலி கொடுத்தன. முகப்புண்கள், நச்சரித்தன. பிடறிப்படைகள் பிய்த்தெடுத்தன.

அந்த வண்டிக்குப் பின்னால், வாடாப்பூ ஒடிக் கொண்டே இருந்தாள்... எஸ்தரால் யூகிக்க முடிந்தது. இவள் வாடாப்பூவாக இருப்பாள் அல்லது தேனம்மாவாக இருப்பாள்.

அந்த வண்டியை, ஊராரில் பலர் முகம் சுழித்துப் பார்த்தார்கள். சிலர் இரண்டில் ஒன்றைப் பார்த்துவிடப் போவதுபோல், அதன் பின்னால் ஒடிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/323&oldid=635779" இலிருந்து மீள்விக்கப்பட்டது