பக்கம்:பாலைப்புறா.pdf/324

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

324 பாலைப்புறா

கொண்டிருந்தார்கள். காசு போட்டு சீட்டாடிக் கொண்டிருந்த சுப்பிரமணியன், சீட்டுக்கட்டை போட்டுவிட்டு, விளையாட்டு சகாக்களை அந்த வண்டியைக் காட்டி உசுப்பிக் கொண்டிருந்தான். அந்த வண்டி அங்குமிங்குமாய் புரண்டு, ஒரு மூன்று பத்தி வீட்டின் முன்னால் போன போது, ஜன்னல் வழியாய் வெளியே பார்த்த ஆனந்தி, கதவைத் திறந்து கொண்டு, மேடை போல் இருந்த திண்ணைக்கு வந்தாள். இரண்டு பிள்ளைகளை இரண்டிரண்டு ஆண்டுகளுக்குள்ளேயே பறிகொடுத்தவள்.

இப்போதும் உண்டாகி இருக்கிறாள். ஆனாலும் கர்ப்ப கால வாளிப்பிற்கு பதிலாக முகம் கூம்பி இருந்தது. தோள் எலும்புகள் துருத்தி நின்றன. அவளால், கணவனை ஏமாற்ற முடிந்தது. ஆனால், தன்னை ஏமாற்ற முடியவில்லை... எப்போதோ தெரிந்து போன விஷயம். ஒரு தடவையில் வராது என்று பல தடவை நினைத்தவள்தான். இப்போது உள்ஸ்ரீப்புக்கள் தடுமாறுவதையும், தடம் மாறுவதையும் பார்த்துப் புரிந்து கொண்டாள். ஆகையால், மனோகரைப் பார்த்ததும், அவளுக்கு பற்றிக் கொண்டு வந்தது. திண்ணையில் நின்று, அவளைப் போலவே நின்ற பெண்களைப் பார்த்து ஒலமிட்டாள்...

‘இந்தப் பாவியால.. இந்த ஊர் என்னபாடுபடப் போகுதோ...? இவன், இன்னும் எத்தனைபேரைசாகடிக்கப் போறானோ...? இந்த ஊர் முழுசையும் சாகடிக்காமல், இவன்சாகமாட்டான்...”

அக்கம் பக்கத்துப் பெண்கள், பயந்து போனார்கள். வெளியூருக்குப் போய்விட்டாலும், இன்னும் ஊர் அபிமானத்தை விடாத ஆனந்தியைப் பார்த்து வியந்து போனார்கள். வீடுகளுக்குள் மொச்சைக் கொட்டை சீனிக்கிழங்கு வகையறாக்களை நொறுக்கிக் கொண்டிருந்த ஆம்பளைங்களின் கொம்புவே, உள்ளே ஒடிப்போனார்கள்.

அந்த வண்டி, கலைவாணியின் வீட்டுக்கு முன்னால் போன போது, தற்செயலாய் வெளியே வந்த சுப்பையா, அவனைக் கோபங்கோபமாகத்தான் பார்த்தார். ஆனால், பார்க்க பார்க்க, கண்கள் பனித்தன. எவனும் தன்னை வேண்டுமுன்னு அழிப்பானா. என்ன சந்தர்ப்பமோ? என்ன இழவோ? மனோகர், அவரைப் பார்த்து வாயாட்டினான். கலைவாணி, எப்படி இருக்காள் என்று கேட்பது போல்...

மூக்கையா, அந்த வண்டி, தவசிமுத்துவின் வீட்டுக்கு முன்னால் போனபோது, மூக்கணாங் கயிற்றைப் பிடித்தார். எஸ்தரை பொருள்படப் பார்த்த போது, அவள் கீழே குதித்தாள். மனோகரைமெள்ள இழுத்து இழுத்து, மீண்டும் கைகளில் ஏந்திக் கொண்டு, அந்த வீட்டு வாசல் பக்கம் நடந்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/324&oldid=635780" இலிருந்து மீள்விக்கப்பட்டது