பக்கம்:பாலைப்புறா.pdf/325

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு.சமுத்திரம் 325

அந்த வண்டியை அங்குமிங்குமாய்ச் சூழ்ந்த கூட்டம் சிறிது சிதறியது. தாய்மார்களோ, தத்தம் பிள்ளைகளை பின் பக்கமாய் இமுத்தார்கள், ஆண்களும் பெண்களுமாய் நின்ற கூட்டத்தைப் பார்த்துவிட்டு, மாடுகள் மிரண்டன. மூக்கையாவிற்கு அந்த நிலையில் அங்கிருந்து போக மனமில்லை.

அதற்குள், தவசிமுத்து வாசலில் வந்து கதவாய் நின்றார். மனோகரைப் பார்த்ததும், அவர் சிறிது ஆடிப் போனது உண்மைதான். ஆனாலும், அந்த இரண்டு லட்சம் ரூபாய் கிடைக்காமல் போனதையும், கலைவாணியின் நகைகளைக் கைப்பற்ற முடியாமல் போனதையும் மனதில் வலிந்து வரவழைத்தார். ஆடிப் போன மனம், இறுகிப் போனது... கல்லர்கி, இரும்பானது...

‘இவனை எதுக்குடி. இங்கே கொண்டு வந்தே? ஒன்னத்தாண்டி”

தாய்க்காரியான சீதாலட்சுமி, கணவன் சத்தம் கேட்டு வாசலுக்கு வந்தாள். மகனை பார்த்துவிட்டு, வாசல் தாண்டி அங்கிருந்தே பாயப் போனாள். நான் பெத்த மவனே ஏன் பெத்தோமுன்னு சொல்லும்படியா ஆயிட்டியேடா..? என் சீமைத்துரையே, செவ்வரளிப்பூவே என்று ஒலமிட்டாள். உடனே தவசிமுத்து, அவளைப்பிடித்து வீட்டுக்குள் தள்ளிக் கதவை சாத்தினார். வெளித்தாழ்ப்பாளான இரும்புக் கம்பியை குறுக்காய்ப் போட்டார். அப்படியும் சீதாலட்சுமி, ஜன்னல் பக்கமாய் வந்தாள்... பெற்ற வயிற்றை மாறி மாறி அடித்தாள். பாலூட்டிய மார்பகத்தை கைகளால் குத்தினாள். ஜன்னல் கம்பிகளில் தலையை மோதினாள். எஸ்தரின் கைகளில் முடங்கிக்கிடந்த மனோகர், அம்மாவைப் பார்த்து லேசாய் கையைத் தூக்கினான்.துக்கிய வேகத்திலேயே கீழே போட்டான்.துக்கச்சுமையைவிட, பெரிய சுமை. இதைப் பார்த்த சீதாலட்சுமியின் வாய் பேசாமல், அப்படியே அகலப்பட்டு நின்றது. மாரடித்த கரங்கள் வளைவாகவே நின்றன. அம்மாவின் பக்கத்தில் வாயும் வயிறுமாக நின்ற மீரா, ஒப்பாரி போட்டாள். இதனால், கூட்டத்தில் நின்ற ஒரு சிலர், தவசிமுத்துவை கீழே தள்ளிப் போட்டுவிட்டு, கதவைத் திறந்து வீட்டுக்குள் ஒடினார்கள். வெளியே நின்றவர்கள், தண்ணிதெளிடா'சுக்கு வச்சு ஊதுங்கடா என்று ஆளுக்குள் ஆள் உபதேசம் செய்தார்கள்.

தவசிமுத்து, மனைவியின்நிலைக்கு மகனே காரணம் என்றும், அவனை இங்கே கொண்டு வந்தவளும் ஒரு உடனடிக் காரணம் என்றும் கற்பித்துக் கொண்டு கத்தினார். ‘எதுக்குடி இந்தப்பயல, இங்கே கொண்டு வந்தே...? இவனை உறிஞ்சுறது வரைக்கும் உறிஞ்சி, சக்கையாக்கிட்டு... கையிலே இருந்த இரண்டு லட்சமும், பேங்கிலே இருந்த எழுபது பவுன்நகையும் தீர்ந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/325&oldid=635781" இலிருந்து மீள்விக்கப்பட்டது