பக்கம்:பாலைப்புறா.pdf/326

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

326 பாலைப்புறா

பிறகு, எல்லாத்தையும் விழுங்கிட்டு... எதுவும் இல்லாமப் போன பிறகு... இங்க வாரதுக்கு, இது என்ன சத்திரம் சாவடியா?”

எஸ்தர், கூட்டத்தினரைப் பார்த்தாள். பெரும்பாலோர், அப்பன்காரனை ஆட்சேபிக்காமல், நிற்பதைப் பார்த்தாள். இப்போது அவளே உச்சக்கட்ட சத்தத்தில் பேசினாள்...

“யோவ் பெரிசு. ஆம்புளையாச்சேன்னு பார்க்கேன்... நீயெல்லாம் ஒரு அப்பனாய்யா...? இந்த மனோகர்கிட்டே எவ்வளவோஎடுத்துச்சொன்னேன். ஊரு வாணான்டா... வாணான்டான்னு ஒப்பாரி போட்டே சொன்னேன். கேட்டாத்தானே...? அம்மா மடில தலை வைக்க முடியாட்டியும், கால் மாட்லாவது சாகனுமுன்னு பினாத்துனான். ஆத்தாக்காரி, காலடிக்குப் போகும் முன்னாடியே, நீயே சாகடிச்சிடுவே போலுகே’

‘செருப்பு பிஞ்சுடுண்டி...’

‘பிய்யட்டும்... வாங்கிக்கிறேன். இந்த மனோ நல்லபடியா வாழத்தான் முடியல. இவனைநல்லபடியாசாகவாவது விடுய்யா. அதிகநாள் காத்திருக்க வாணாய்யா... ரெண்டு நாளுல போயிடுவான். திரும்பி வராமப் போயிடுவான்... டாக்டரே சொல்லிட்டார்”

‘அதெல்லாம் முடியாது... எந்த வழியாய் வந்தியோ... அந்த வழியாப் போ... இவனோட போ...’

சீதாலட்சுமி, மீண்டும் ஜன்னல் பக்கம் வந்து, சுமந்து பெற்ற பிள்ளையை, இன்னொரு தடவை சுமக்கப் போவது போல் கைகளை வெளியே விட்டு ஆட்டினாள். பக்கவாட்டில் தெரிந்த தவசிமுத்து பக்கமாய், தலையைத் திருப்பி முடியாமல், கண்களைக் கோணலாக்கியபடியே கத்தினாள்.

‘இந்தா பாரும் மரியாதையா என் மவன... என் செல்வத்த... iட்டுக்குள்ள தூக்கிட்டு வாரும்... நான் பெத்த பிள்ளைக்கு என் சீமைத்துரைக்கு... இல்லாத வீடு, எவனுக்கும் இல்ல... என் மவன், எங்கே பிறந்தானோ, அங்கேயே சாகட்டும்... அய்யோ! நான் தவமிருந்து பெத்த மவனே...! நீ சாகப் போறியா...? செத்துத்தான் போவியா...”

சீதாலட்சுமி புலம்புவதைப் பார்த்து, கூட்டம் கையைப் பிசைந்தது. ஆனாலும், பட்டைதாரியாய் போன பட்டாதாரி சுப்பிரமணியன், பழைய ராமசுப்பு, ஆனந்தியின் தந்தை, இறந்ததுபோக எஞ்சியிருக்கும் உள்ளூர் விவேகிகள் ஆகியோர், ஆங்காங்கே செம்மறியாடாய் நின்றவர்களை சண்டைக்கிடாவாய் மாற்றும் வகையில் காதுகளில் ஒதினார்கள். “இவன்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/326&oldid=635782" இலிருந்து மீள்விக்கப்பட்டது