பக்கம்:பாலைப்புறா.pdf/327

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு.சமுத்திரம் 327

இங்கே இருந்தால், ஊரே ஒழிஞ்சுடும். இந்த நோயி அப்படிப்பட்ட நோய்... அவன் மூச்சுப்பட்டாலே முடிஞ்சுடும். அவன் உடம்பிலே படுற காத்து... நம்ம உடம்பிலே பட்டாலே போதும்... ஒரு வழியாயிடுவோம்’

உள்ளுர் பெரிய தலைகள், ஒன்றாய்க் கூடின. பச்சாதாபமாக தலைகளை ஆட்டினாலும், அவற்றின் கண்கள் பயங்கரமாயின. இப்போது லேசாய் தடுமாறி நின்ற தவசிமுத்துவைப் பார்த்து, பழைய கூட்டாளியான ராமசுப்பு தீர்ப்பளித்தார்.

“ஒம்ம பையன்... இந்த ஊர்ல இருக்க முடியாது’

ஜன்னல் கம்பிகள் வழியாய் ஒரு சத்தம்

‘எங்க வீட்டுல இருந்தா ஒனக்கென்ன...? என் பிள்ளை என் வீட்டுலதான் இருப்பான்... நீ எதுக்கு சம்மன் இல்லாம ஆசராகரே?”

‘ஒன் வீடும், இந்த ஊர்லேதான் இருக்குது. தவசிமுத்து.. ஒன்னைத்தான்... ஊரைப் பகைக்கின் வேரோடு கெடு முன்னு ஒன் வீட்டுக்காரிக்கிட்டே சொல்லு.’

‘'சாமிகளா... தர்மபிரபுக்களா... என் பிள்ளையை என்கிட்ட இருந்து பிரிச்சிடாதிய... ஒங்களுக்கு கோடிப்புண்ணியம்... அய்யாமாருங்களா... ரெண்டு நாளுதான்னு... அவள்சொல்லிட்டாள். யாரு பெத்த பெண்ணோ...? அவளே கலங்கும் போது... ஒங்க மனசு கல்லாப் போகலாமா? அய்யாமாரே... அம்மாமாரே... ஒங்களத்தான்...’

சீதாலட்சுமி, ஜன்னல் கம்பிகள் வழியாய் கண்களால் கெஞ்சினாள். கையெடுத்துக் கும்பிட்டாள். கூட்டத்தில் பாதிப்பேர் மனம் கரைந்தது. வாடாப்பூவும், ஒவ்வொருவர்மோவாயாய்ப் பிடித்துக் கெஞ்சினாள்.

இயலாமையில் தவித்த கூட்டத்தில் ஒருத்தன், இன்னும் வண்டியைத் திருப்பாமல் நின்ற மூக்கையாமீது பாய்ந்தான்.

‘எல்லாம்... இந்த மூக்கையாவால வந்த வினை. ஒன்னை யாருப்பா வண்டில ஏத்திக்கிட்டு வரச்சொன்னது...? கடைசியிலே ஒன் சாதிப்புத்தியக் காட்டிட்டே... பாரு... காலனி புத்திய காட்டிட்டேபாரு’

மூக்கையா, தன்னை அறியாமலே வேட்டியைத் தார்பாய்த்துக்கட்டினார். பிறகு விஷயம் புரிந்து, அதை இழுத்துப் போட்டுக் கொண்டே பதிலடி கொடுத்தார்.

‘இந்தாபாரும்... எதைப் பற்றி பேசினாலும், சாதியப் பத்தி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/327&oldid=635783" இலிருந்து மீள்விக்கப்பட்டது