பக்கம்:பாலைப்புறா.pdf/328

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

328 பாலைப்புறா

பேசாதேயும்... அப்புறம் எங்க சின்ன பயல்கள எங்களால கட்டுப்படுத்த முடியாது... அதோட, சாதிகளப் பத்தி பஞ்சாயத்து பேசினால், ஒங்க சாதிக்குத்தான் அசிங்கம்’

‘இவனுக்கு திமிரைப்பாரேன்’

‘ஏய். வெண்டைக்காய் வியாபாரி சும்மாக்கிட... இப்பத்தான் கூலித்தகராறும்,"குத்தகை தகராறும் தீர்ந்திருக்கு... உனக்கு நிலமில்ல என்கிறதால நீபாட்டுக்குப் பேசப்படாது’

‘சரிப்பா... மூக்கையாவை விடு... இந்த சீக்காளி மனோகரை என்ன செய்யலாம்?”

‘ஊருக்குள்ளவைக்கப்படாது. அவ்வளவுதான் எனக்குத் தெரியும். மீதி விஷயத்தை ஊருதான் தீர்மானிக்கணும்.’

தவசிமுத்தும் மன்றாடினார்...

‘இவனை தல முழுகுன தகப்பன்தான் நான். ஆனாலும் மனசு கேட்கமாட்டக்கு. இன்னைக்கு மட்டுமாவது, இவனை பெத்தபாவி மொட்டை, சீதாலட்சுமியோடஏக்கத்தை போக்குங்கய்யா...!”

‘ஊரு முழுசையும் நீரு கொல்லணுமுன்னு நினைச்சா, நாங்க சும்மா இருக்க முடியுமா?”

ஊரார், இப்போது ஒன்றுபட்டு நின்றார்கள். வீட்டுக்குள் அழுகைச் சத்தங்கள்... வெளியே கோபதாபச்சத்தங்கள்...

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/328&oldid=635784" இலிருந்து மீள்விக்கப்பட்டது