பக்கம்:பாலைப்புறா.pdf/329

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

329

33

அந்தக் கீற்றுக் கொட்டகை, கிட்டத்தட்ட அதே வடிவத்தில் ஒரு கான்கிரிட் கட்டிடமாக மாற்றம் கண்டது. ஒற்றைக் கட்டிடம். ஆனாலும் ஆலமரம் போல் தன்னோடு இணைந்த சில கிளைக் கட்டிடங்களையும் உள்ளடக்கி உள்ளது. மூன்று கிரவுண்ட் இடம், இப்போது இரண்டு ஏக்கரானது. ஆங்காங்கே தென்னை மரக் குட்டிகள், ஒலைவிரித்து ஆடின. மாமரக் குழந்தைகள், வயதுக்கு வந்து இலைதழைகளை ஆடைகளாய் அணிந்துநின்று ஆர்ப்பரித்தன. நான்கைந்து முந்திரி மரங்கள், அடிவாரத்தைக் காட்டாமல், ராட்டின குடைவிரித்து நின்றன. நெல்லிக்காய் மரங்கள் கம்மல்களையும், தங்கரளி மரங்கள் பாம்படக் காய்களையும் ஆட்டி ஆட்டிக் காட்டின. சுற்றிலும் காம்பவுண்ட் சுவர். அதன்வாய் போன்ற வாசலில், ஒரு இரும்பு கிராதிகேட்... மதில் சுவருக்கு பற்கள் மாதிரியான இந்தக் கேட்டை, தேவைப்பட்டால் மறைத்துக் கொள்ள ஒற்றை உதடு போலான இன்னொரு இரும்புத் தகடு கேட் கதவு...

இந்த மதில் சுவரின் வாசலுக்கு மேலே உள்ள பெயர்ப் பலகையும் வித்தியாசமானது. செவ்வகமாய் நீண்ட பலகை, நடுப்பகுதியில் மட்டும் வட்ட வடிவமானது. இந்த வட்டத்திற்குள் பல்வேறு உள்வட்டங்கள். பெரிய வட்டத்திற்கு வெளியே வளையங்கள். ஒவ்வொரு வளையத்திற்கு வெளியேயும், சுருண்டு நெளிந்த இரண்டு கறுப்புக் கோடுகள், பார்ப்பதற்கு கருநாகங்களாய் வளைந்து நின்றன. மூன்று வளைவுகளாய் நெளிந்தன. இரண்டாவது வளைவில் ஒரு சின்ன உருளை வடிவம். இப்படி இந்த நடுப்பகுதி, ஒரு ஹெச்.ஐ.வி. கிருமியின் கோடிக் கணக்கான பூதாகர உருவத்தை நகல் எடுத்த உருளை வடிவம். இதன் இரு பக்கமும் நீண்ட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/329&oldid=635785" இலிருந்து மீள்விக்கப்பட்டது