பக்கம்:பாலைப்புறா.pdf/330

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

330 பாலைப்புறா

செவ்வகப்பலகையில், எய்ட்ஸ் திருமணதடுப்பு இயக்கம்’ என்ற வெள்ளை சிவப்பு வண்ணஎழுத்துக்கள் வெள்ளை... அமைதிக்கு. சிவப்பு. உறுதிக்கு”

அந்தப் பெரிய கட்டிடத் தளம் கிளை பிரிந்து, பிரகாரம் போல் சென்றடையும் பின்பக்கம், ஒரு சுமாரான வீடு... இதன் இரண்டாவது அறையில் கலைவாணி கட்டிலில் படுத்து இருந்தாள். பத்து நாளாய் லேசான காய்ச்சல்; உடலுக்குள்ளேயே ஒட்டிக் கொண்டது மாதிரியான தணல், வெளியே தொட்டால் தெரியாத உள்காய்ச்சல், இவ்வளவு நாளும் மறைத்துப் பார்த்தாள். இன்றைக்கு முடியவில்லை.

காலமாற்றம், கலைவாணியின் உடம்பிலும் மாற்றங்களைக் காட்டியது. கண்களில் படபடப்புக்குப் பதிலாக ஒரு சாந்தம். மாம்பழமாய் இருந்த முகம், நார் நாரான பனம் பழமாய் லேசான சுருக்கங்களைக் காட்டியது. முகத்தில் உற்றுப் பார்த்தால் மட்டுமே தெரியும் சின்னச்சின்னபுள்ளிகள்.

அக்கா மகன் மோகன்ராமை வழியனுப்பி விட்டு, உள்ளே வந்த சீனியம்மா, கலைவாணியை மருவி மருவிப் பார்த்தாள். ‘இப்படியே சாப்பிடாமல் கிடந்தால் எப்படிம்மா? ஹார்லிக்சாவது குடிக்கிறியா?” என்றாள். மகள் கையாட்டி மறுத்துவிட்டாள். பிறகு அம்மாவின் முகம் மேலும் வாடக் கூடாது என்பதற்காகவே, படுக்கையில் இருந்து எழுந்து, கட்டில் சட்டத்தில் ஒரு தலையணையை சுவரோடு சாய்ந்து வைத்து, அதில் தலைசாய்த்து, படுக்காமலும் உட்காராமலும், இந்த இரண்டிற்கும் இடைப்பட்ட நிலையில் கிடந்தாள்.

வெளியே உள்ள ஆலோசனை கூடத்தில் காரசாரமான சத்தம். ‘கமர்சியல் செக்ஸ் ஒர்க்கர்ஸ்’ என்று நவீனமாய் அழைக்கப்படும் விலை மகளிருக்கு அல்லது விலைபோன மகளிர்க்கு, காண்டோம்கள் கொடுத்து, அவற்றை அவர்கள் தத்தம் தாற்காலிகக் கூட்டாளிகளிடம் கொடுக்க வேண்டும் என்ற யோசனை கமிட்டிக்கு வந்தது. கலைவாணியும், பழைய சுமதியிடம் பணியாற்றிய காமாட்சியும் கடுமையாக எதிர்த்தார்கள். எய்ட்ஸ் விழிப்புணர்வு பெயரால் நடத்தப்படும் காண்டோம் விழிப்புணர்வு கூத்துக்களை, நாம் ஏன் நடத்த வேண்டும் என்று கேட்டார்கள். ஒருத்தனுக்கு ஒருத்தி என்ற குடும்ப அமைப்பின் ஆரோக்கியத்தை ஏன் வற்புறுத்தக் கூடாது... என்று வாதிட்டார்கள். அதோடு, விலைமாதுகளை அங்கீகரிப்பது போல் கூட்டி வருவது, முறையில்லை என்றார்கள். ஆனாலும் அசோகன், ‘கலைம்மா... பிறக்கும் போதே எவளும் விலைமகளாய் பிறக்கவில்லை... இன்னும் சொல்லப் போனால், ஒருதாசிக்குத்தான் கற்பின் மகிமை அதிகமாய் தெரியும்’ என்ற போது, கலைவாணி, “நோ, நோ” என்றாள். உடனே அவன், ‘'நீ கூடத்தான் லாரிக்காரனைப் பார்த்து ஒன்னை அறியாமலே கையை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/330&oldid=635787" இலிருந்து மீள்விக்கப்பட்டது