பக்கம்:பாலைப்புறா.pdf/331

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு.சமுத்திரம் 331

நீட்டினே... சந்திரா, பார்க்கவிட்டால், நீ என்ன ஆகியிருப்பே. என்றபோது, கலைவாணி, இந்த விலையாக்கப்பட்ட மகளிர் கூட்டத்திற்கு இணங்கினாள். சிறிது நேரம் வரை, அந்தக் கூட்டத்தில்தான் இருந்தாள். அங்கே ஒரு பாவப்பட்ட பெண், பங்களா தொழிலில் இருந்து தூக்கி எறியப்பட்டு, ஒரு லாரிக்காரனிடம், இவளைப் போலவே கையை நீட்டி, புதருக்கு வந்த அனுபவத்தை துக்கித்துச் சொன்னபோது, கலைவாணி அழுதுவிட்டாள். அசோகனின் தூண்டுதலில், காமாட்சிதான், கலைவாணியை, இங்கே கொண்டு வந்துவிட்டாள். இப்போதும் மனதுக்குள், கரையான்அரிப்பு. கண்ணுக்குள்துடிப்பு...

அசோகனும், சந்திராவும் உள்ளே வந்தார்கள். அசோகனின் கைப்பக்கம் ஒரு அய்ந்து வயதுப்பயல்... சந்திராவின் கழுத்தில், இந்தப் பயலுக்குக் காரணமான ஒரு மஞ்சள்கயிறு. இருவருமே... கொஞ்சம் தடித்திருந்தார்கள். முகங்களும் சிறிது கன்றிப் போயிருந்தன... பப்பாளிக்காய் பழுக்கப் போவதுபோல்... அந்தப்பயல் ‘அத்தே ‘ என்று சொன்னபடி, கலை வாணியின் பக்கத்தில் போனான். உடனே, அவள் அவனைத் தூக்கி அருகே வைத்துக் கொண்டு, அவன்முதுகைத் தட்டிக் கொடுத்தாள்.

சீனியம்மாள், அசோகனைப் பார்த்து கவலை தெரிவித்தாள்.

‘எனக்கு பயமாய் இருக்குது. பத்துநாளாய் காய்ச்சலாம். இவள் இன்னைக்குத்தான் வாயைத் திறந்தாள்.’

‘கலைம்மா... உனக்கு எத்தனை தடவை சொல்லி இருக்கேன். எது வந்தாலும், உடனே சொல்லணுமுன்னு. சந்திரா ஒனக்கு புத்தி எங்கே போச்சுது...? கலையை, டெய்லி செக்கப் செய்யச்சொன்னேனே...”

“சும்மா கிடங்கஅசோக்... டெய்லி செக்கப் செய்கிற அளவுக்கு கலைக்கு எதுவும் இல்ல. நம் இரண்டு பேரையும் விட, ஆரோக்கியமாத்தான் இருக்காள்.’

‘இன்னும் நீஅவசர குடுக்கைதான்.”

‘நீங்கதான் அப்படி... என்னால நிரூபிக்க முடியும்.

“எங்கே... ஆதாரம் காட்டு. பாக்கலாம்’

‘கலைவாணி... ஒங்க கட்சி... அதனால, இப்போ நிரூபிக்க மாட்டேன். ‘

கலைவாணி சிரித்தாள்... பக்கத்தில் இருந்த பயலைப் பார்த்து, ‘பயப்படாத டா... இது ஊடல்’ என்றாள். உடனே அந்தப் பயல்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/331&oldid=635788" இலிருந்து மீள்விக்கப்பட்டது