பக்கம்:பாலைப்புறா.pdf/332

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

332 பாலைப்புறா

‘அப்படின்னா அப்படின்னா’ என்று அத்தையை நச்சரித்தான். சீனியம்மா மீண்டும் கவலை தெரிவித்தாள்.

‘எனக்குப் பயமா இருக்குது சந்திரா” ‘கவலைப்படாதீங்க... அத்தே... குரோசின் கொடுத்தால் சரியாயிடும்.”

“ஆமாம் சித்தி... நீங்க இப்போ மட்டுமில்ல, எதிர்காலத்திலயும் கூட, கலைக்காக கவலைப்பட வேண்டியது இருக்காது. அமெரிக்காவில், லாஸ் ஏஞ்சல் நகர்ல, ஹெச்.ஐ.வி. கிருமிகள் உள்ள ஒரு குழந்தைக்கு, ஐந்து வயதில் அந்த கிருமிகள் இருந்த அடையாளமே தெரியல... இந்த அதிசயத்தை கலிபோர்னிய பல்கலைக்கழக எய்ட்ஸ் பிரிவு ஆய்வு செய்து வருது. இந்தப் பிரிவின் உறுப்பினர் ஜே.பிரைசன் என்பவர் இதை தெரிவித்திருக்கார். கேரளத்தில சரஹஸம்ஹிதை, அஷ்டாங்க இருதயம், சகஸ்ரயோகம் ஆகிய பழைய நூல்கள் தெரிவிக்கிற இருபத்தைந்து மூலிகைகளைக் கொண்டு, இந்த நோய்க்கு ஒரு மருந்து கண்டுபிடிச்சிருக்காங்களாம்... இதனால் நோயாளிகளிடம் நல்ல அறிகுறிகள் காணப்படுவதாய் கேள்வி. அமெரிக்கா வில் அதே கலிபோர்னியாவில் உள்ள டாக்டர் எஸ்ஸே, இதே மருந்தை, மெக்ஸிகோக்காரர் எட்வர்டோகார்கியாஎன்பவருக்கு கொடுத்து குணப்படுத் தியதாய் சொல்றார். “அதைக் கண்டேன். இதைக் கண்டுபிடிச்சேன்னு ஆயிரம் பேர் புறப்பட்டாலும், டாக்டர் எஸ்லே சொல்வதும் நம்பும்படியாய் இருக்குது. அதோடரத்தத்தில் ஒரு கோட்டிங் கொடுத்து, எய்ட்ஸ் கிருமிகளை ஒழிக்க முடியுமான்னு எங்க அலோபதி சிஸ்டத்துல. சர்வதேச ஆராய்ச்சி நடக்குது. நானும் சந்திராவும் கலைக்காக அஸிடோ - தைமிடின் மருந்தை லண்டன்லே, இருந்து வருவிக் கிறதுக்கு முயற்சி எடுக்கோம். வேணுமுன்னால் பாருங்க! கலை... நம்மை எல்லாம் வழியனுப்பி வச்சிட்டுத்தான் வருவாள். நாம்தான், கலைக்காக அங்கே காத்திருக்கணும். ஏன்னா, எனக்குப் பிளட் பிரசர். சந்திராவுக்கு டயாபெடிக்ஸ்... ஒங்களுக்கு வயசாயிட்டு...’

‘'டாக்டரய்யா... தத்துப்பித்துன்னு உளறப்படாது. என்னை நல்ல படியாய் வழி அனுப்பி வைக்கிறதாய் வாக்குக் கொடுத்திருக்கீங்க... மறந்திடாதீங்க.”

நெடிய கொடிய அமைதி... சீனியம்மா, தாளமுடியாமல், உள்ளேபோய் விட்டாள். அசோகன் மீண்டும் தொடர்ந்தான்.

‘நீ... நான், சந்திரா, இதோ வந்து நிற்காளே இந்த காமாட்சி... நாம் இப்போக்கூட திருப்தியோட சாகலாம்மா... அந்த அளவுக்கு செய்திருக் கோம். ஐந்தாறு எய்ட்ஸ் கல்யாணத்தை தடுத்திருக்கோம். ஹெச்.ஐ.வி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/332&oldid=635789" இலிருந்து மீள்விக்கப்பட்டது