பக்கம்:பாலைப்புறா.pdf/333

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு.சமுத்திரம் 333

பெண்களுக்கு வேலை கொடுத்திருக்கோம். பல நோயாளிகளுக்குபயனுள்ள தொழில்களை நடத்தப் போறோம். நம்மகிட்ட யோசனை கேட்க எத்தனையோ பேர் காத்திருக்காங்க. நம்ம அமைப்போட பெயர், நாலு பக்கமும் அடிபடுது.. அதனால, நாம சாவை சந்தோஷமாய் எதிர் நோக்கலாம்.”

‘என்ன அசோக்...? நாம், இறப்பு விழிப்புணர் இயக்கமா நடத்து றோம்...? நீங்க சொன்னகாரணங்களுக்காகவே, நாம் எல்லாரும் நீண்டநாள் உயிர் வாழனும். நமக்கு சொஜ்ஜி, பஜ்ஜி செய்து தருகிற எங்கத்தை- ஒங்க சித்தி அதிகநாள் உயிர் வாழனும், பீபாசிட்டிவ்...”

‘பரவாயில்ல... சந்திரா இன்னிக்கித்தான் நீ புத்திசாலித்தனமாய் பேசுறே”.

‘நான் எப்போதுமே அப்படித்தான். ஒங்களுக்குத்தான், என்புத்திசாலித் தனத்தை புரிஞ்சிக்கிற புத்தி புதுசா வந்திருக்கு’

கலைவாணியும் காமாட்சியும் சேர்ந்து சிரித்தார்கள். ஆனாலும் கலைவாணியின் சிரிப்பு:உடனடியாய் அடங்கியது.

‘'தேனம்மா... எப்படி இருக்காள்டாக்டரய்யா...’

‘இன்னும் ஒரு வாரத்தில முடிஞ்சிடும். சொல்லுக்குச்சொல் கலைதான். மூச்சுக்கு மூச்சுநீதான்...”

‘என்னை. அவள் கண்ணிலே காட்ட மறுக்கீங்களே டாக்டரய்யா! எத்தனைதடவை கேட்டுட்டேன்?”

‘இப்போ நீ வீக்... நாலு நாளாகட்டும், கூட்டிக்கிட்டுப் போறேன்... அப்புறம் காமாட்சி..அந்தப் பெண்கள் போயிட்டாங்களா?”

‘போயிட்டாங்க... எத்தனையோ எய்ட்ஸ் விழிப்புணர்வு ஒட்டம், துண்டு பிரசுரம் நடத்துறவங்க, மக்களுக்கு புரியும்படியா ஏன் ஒரு சினிமா படம் எடுக்கலன்னு கேட்டாங்க. மக்களுக்கு தெரியக் கூடாது என்கிறதுல கவனமா இருக்காங்களோன்னு கிண்டல் பண்ணினாங்க... அப்புறம், கலை! சந்தானக்குமார் வந்திருக்கார்...’

கலைவாணி உடனடியாய், எழுந்தாள். அசோகனும் சந்திராவும் சீனியம்மாபோடுகிற காபிக்காக ‘காத்திருந்தபோது'இவள், காமாட்சியுடன் வெளியே வந்தாள். அலுவலக அறைக்குள் வந்தவளைப் பார்த்து களவிளம்பர அதிகாரியான சந்தானக்குமார் எழுந்தார். கலைவாணி உட்காராமலே கேட்டாள்...

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/333&oldid=635790" இலிருந்து மீள்விக்கப்பட்டது