பக்கம்:பாலைப்புறா.pdf/334

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

334 பாலைப்புறா

“என்ன சார். நீங்க எனக்கா... எழுந்திருக்கிறது? நான் ஒங்க பழைய

கலைவாணிதான். காமாட்சி... அம்மாக்கிட்ட சொல்லி ஒரு கப் காப்பி”

காமாட்சி, புரிந்து கொண்டாள். அசோகன் சந்திரா போல் தானும் புரிந்தது போல்தலையாட்டி விட்டுப் போய்விட்டாள்.

‘எப்படி சார் இருக்கீங்க...?”

‘நல்லா இல்லம்மா... சி.பி.ஐ.க்காரங்க பழையபடியும் விசாரணைக்கு கூப்பிட்டு இருக்காங்க. மூணு வருஷம் இழுத்தடிச்சிட்டு, முனு வருஷம் தூங்கிட்டு, இப்போ எனக்கு பிரமோஷன் வார சமயமாய் பார்த்து கூப்புடுறாங்க...”

‘என்ன சார். அநியாயமாய் இருக்குது... நானே சி.பி.ஐ.க்கு எழுதி கொடுத்தேனே. நேரு இளைஞர் மைய பகுதி நேர ஒருங்கிணைப்பாளராய் இருக்கும் போது, நீங்க நடத்துன பிலிம் ஷோக்களுக்கு ஒரு பைசா கூட கொடுக்கலைன்னு எழுதினேனே. சுமதி, ஒரு மோசடிப் பேர்வழி... அவள் கணக்குப் புத்தகம் ஒரு கண்ணாடியாகாதுன்னு ஸ்டேட்மெண்ட் கொடுத்தேனே. சுமதி வீட்டைவிட்டு வ்ைத்துவிட்டு. ஒங்க வீட்ல சி.பி.ஐ. ரெய்ட் செய்தது தப்புன்னு வேற சுட்டிக்காட்டி இருந்தனே...’

‘இந்தத் தப்புத்தாம்மா... தப்பா போயிட்டு... சிபிஐக்கு புதுசா வந்திருக்கிற டிஐஜி, என் பைல பார்த்துட்டு, ஒங்க ஸ்டேட்மென்டை ஒரு சவாலா எடுத்துட்டாராம். கிணத்துக்குள்ள கல்லாய் கிடந்ததை தூக்கிப்பிடித்து என்தலைக்கு குறி பார்க்கார், ‘

‘'அட கடவுளே’

‘இதுதாம்மா... இன்றைய நேர்மையான கவர்ன்மெண்ட் செர்வன்ட் நிலைமை. மத்திய அரசு ஊழியன்... ஒரு தடவை சி.பி.ஐ.யில் மாட்டிக்கிட்டால், அவனுக்கு பத்து வருஷம் நிம்மதி போயிடும்... மாநில அரசுல... இதைவிடக் கேவலம்... ஒருத்தர், சாயங்காலம் ரிட்டயர்ட் ஆகப் போகிறார் என்றால்... அன்றைக்கு மாலையில் மூன்று மணிக்கு, அவரை சஸ்பென்ட் செய்வாங்க... எனக்கு புரமோஷன் பெரிசில்லம்மா. ஆனால், யார்கிட்டயும் எதையும் எதிர்பார்க்காத என்னைப் போய், சுமதி கிட்ட பணம் வாங்கினதாய் நினைக்கிறதை, தாங்க முடியலம்மா...’

‘எல்லாம்... ஒங்க இணை இயக்குனரால் வந்த வினை...’

‘அந்த ஆளும். நல்லவர்தான்... ஆனா பாதி பைத்தியம்... படு சுத்தம். ‘சுத்தன் துஷ்டனோட பலன் செய்வான்னு’... மலையாளத்தில ஒரு பழமொழி இருக்குது பாருங்க. அந்த மாதிரி ஆசாமி. எல.எாவது லஞ்சம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/334&oldid=635791" இலிருந்து மீள்விக்கப்பட்டது