பக்கம்:பாலைப்புறா.pdf/335

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு.சமுத்திரம் 335

வாங்கிட்டான்னு யாராவது சொல்லிட்டால், உடனே நம்பிடுவார். இதுதான் இன்றைய நேர்மையாளர்களோட காபக்கேடு. நானும் எந்த தப்பும் செய்யாததால், அவர் கிட்ட சூடாப் பேசிட்டேன். இதனால அவரும் சிபிஐக்கு எழுதிட்டார். இப்போ, அவரு டில்லியில் இயக்குநராய் இருக்குறார். ரொம்ப வருத்தப்படுகிறார். ஆனால் பாரம் சுமக்கிறது நான், அதுவும் பழிபாவம்...’

‘நான் என்ன செய்யணுமுன்னு சொல்லுங்க சார். அதைச் செய்யுறேன் சார். உங்களோட இந்த நிலைமைக்கு நானும் காரணமாயிட்டேன். இதுக்காகவே, எது வேணுமுன்னாலும் செய்யத் தயார்’

‘பழையபடியும் ஒரு ஸ்டேட்மெண்ட் வேணும்... இந்தத் தடவை என்னைப் பிடித்துவிட்டு, சுமதி மீது நடவடிக்கை எடுக்காத சிபிஐ மீது வழக்கு போடப் போவதாய் நோட்டீஸ் மாதிரி அனுப்புங்க!”

‘'நான் தயார்... ஆனால் இது ஒங்களுக்கே.’

‘பரவாயில்லம்மா... வருஷக் கணக்கிலே நிம்மதி இல்லாமப் போறதைவிட, ரெண்டுலே ஒண்ணு தெரியட்டும்’

‘இப்பத்தான் புரியுது சார்... ஹெச்.ஐ.வி. கிருமிகள், வேறு வேறு ரூபத்தில், வேறு வேறு காரியங்களை செய்கிறது, இப்பத்தான் புரியுது. நான் நோட்டீஸ் ரெடி செய்து வைக்கேன். நாளை மறுநாள் வர்றீங்களா, இல்ல. நான் வரட்டுமா...’

“நானேவாறேம்மா...”

‘'கண்கலங்காதீங்க... சார்... வேலையில் இருந்து நீங்க விலக்கப் பட்டாலும், இந்த அமைப்பு ஒங்களை தாங்கிக்கும்”

‘வாறேம்மா...துக்கமாவந்துட்டு, சந்தோஷமா போறேம்மா...’

‘இதோ காபி. வந்துட்டு சார்’

சந்தானக் குமார், போய்விட்டார். அதுவரை, வெளியே நாசூக்கு கருதி மட்டுமே பேசிக் கொண்டிருந்த சந்திராவும் அசோகனும் உள்ளே வந்தார்கள். அவர்களிடம், அந்த விளம்பர அதிகாரியின் விபரீத நிலைமையை கலைவாணி விளக்கப் போனாள். அதற்குள், இரண்டு பேர் தபதபவென்று உள்ளே வந்தார்கள். எதிர் நாற்காலிகளில் உட்கார்ந்தார்கள். ஒருத்தர், கட்சி மேடைகளில் வட்டமடிப்பவர். இன்னொருத்தர் கல்லெறி சம்பவங்களின் போது முன்னால் நிற்பவர். கலைவாணிக்கு எரிச்சல், அசோகனுக்கு எரிச்சலுக்கு மேல் எரிச்சல். பெரியவர்களாகவே இருந்துட்டுப் போகட்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/335&oldid=635792" இலிருந்து மீள்விக்கப்பட்டது