பக்கம்:பாலைப்புறா.pdf/337

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு.சமுத்திரம் 337

‘இந்த மாதிரி நடப்பு தெரிய வேண்டாம்”

உட்கார்ந்தவர்களில் இப்போது வட்ட முகக்காரருக்குப் பதிலாய், கோணல்முகக்காரர் பேசினார்.

‘போனை, இந்தப் பக்கமாய் தள்ளுங்க... போலீஸ் இன்ஸ்பெக்டர் கிட்டே பேசணும். எஸ்.பி., அவர்கிட்ட ஒரு விபரம் சொல்லச்சொன்னார்.”

‘மன்னிக்கணும்... டெலிபோனை நாங்க யாருக்கும் கொடுக்கிறது இல்லை; இது தர்மத்துக்காக உள்ள இடம். தர்ம சத்திரம் இல்ல...’

உட்கார்ந்தவர்கள், நாற்கலிகளை உதறியபடியே எழுந்தார்கள். வட்ட முகமும், கோண முகமும் மாறி மாறிப்பேசின...

‘மோகன்ராம்... தங்கை என்கிறதால இத்தோட விடுகிறோம். இல்லாட்டால் இந்தபோனைதுக்கிட்டுப்போக அதிக நேரம் ஆகாது.”

‘ஆனாலும் ஒண்னும்மா... இந்த இரண்டு ஏக்கரும், காலேஜ் கட்டுறவங்க இடம். நீங்க முன்னால எவ்வளவுக்கு வாங்கினிங்களோ, அதுல பாதிப்பணத்தை கொடுப்பாங்க. இல்லாட்டால் வம்புதான். கொடுத்தால் உங்களுக்கு நல்லது. நீங்க கொடுத்தாலும், கொடுக்காட்டாலும் எங்களுக்கு எப்பவுமே நல்லது. லாரி மேல சைக்கிள் மோத முடியாது. அடுத்த தடவை பத்திரத்தோடவருவோம்.”

வந்தவர்கள், போனார்களா.. அல்லது மறுபக்கம் நிற்கிறார்களா என்று நினைக்க முடியாத அளவிற்கு, அவர்கள் மரத்துப் போனார்கள். இருந்த இருக்கைகள் மீது இருக்கையானார்கள். இறுதியில் அசோகன் வெகுண்டு சொன்னான்.

‘கவலைப்படாதே... கலைம்மா... ஆனானப்பட்ட சுமதியையே துரத்துணவங்க நாம். இவங்க எம்மாத்திரம்.”

‘சுமதி, இப்போதிண்டுக்கல் பக்கம் கொடிக்கட்டி பறக்கிறாளாம்...”

‘நீங்க நினைக்கிறது மாதிரி விஷயம் சிம்பிள் இல்ல அசோக் இங்கே வந்தவங்க சாதாரணமானவங்கதான்... ஆனால் அசாதாரணமான சக்திக ளோட கருவிகள். எந்த சக்திகள், தமிழ்நாடு முழுதும்... பலரை மிரட்டி மிரட்டி. அவங்க சொத்துக்களை அடிமாட்டு விலைக்கு வாங்கிற்றோ, எந்த சக்திகள், பட்டாக்களை அதன் உரிமையாளர்களுக்கே தெரியாமல் மாற்றியதோ, அந்த சக்திகளின் ஏஜெண்டுகள்தான், நம்மை மிரட்டிட்டுப் போறவங்க. ‘

uIr. 22

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/337&oldid=635794" இலிருந்து மீள்விக்கப்பட்டது