பக்கம்:பாலைப்புறா.pdf/338

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

338 பாலைப்புறா

‘அப்போ இந்த இடத்தை தாரைவார்க்க சொல்றியா?”

‘இப்படி கேட்க... ஒங்களுக்கு எப்படித்தான் புத்தி போகுதோ... அந்த அர்த்தத்திலயா பேசுனேன்?”

கலைவாணியின் கண்கள், தீயாயின. கைகள், முறுக்காயின... தீர்மானமாய் பேசினாள்.

‘எந்த சக்தியாய் இருந்தாலும் சரி, எந்தக் கொம்பன்... கொம்பியாய் இருந்தாலும் சரி... இங்கே அங்கம் வகிக்கிற நூற்று நாற்பத்திரண்டு உறுப்பினர்களின் பிணத்தில ஏறித்தான், அவங்க இந்த இடத்துக்கு வர முடியும். காமாட்சி! நம் பேரவைக் கூட்டத்தை, நாளை மறுநாளே கூட்டணும். நாளைக்கே பணிக்குழு கூடணும். சர்க்குலர் போடும்மா. இதைவிடப்படாது. இந்த நிலம் போயிடுமே...என்கிறது மட்டுமல்ல பிரச்சினை. இந்த ஆணவப் பூனைகளுக்கு யாராவது மணி கட்டித்தான் ஆகணும். அது நாமாவே இருப்போம்”

அசோக், கை தட்டினான்.

‘எனக்கு ரொம்ப சந்தோஷம் கலைம்மா... இந்தப் பிரச்சினை தீர்வது வரைக்கும், ஒனக்கு குரோசின் தேவையில்லை... வைட்டமின்மாத்திரைகள் கூட அவசியம் இல்லை... நிசமாவேத்தான்...’

கலைவாணியும் காமாட்சியும், டாக்டர் ஜோடியோடு எழுந்தார்கள். எய்ட்ஸ் விழிப்புணர்வுகலைக்கூடமாய் விளங்கும் முன்பக்கஅறை வழியாய் நடந்து, வெளியே வந்தார்கள். ஆங்காங்கே முளைவிட்ட பல்வேறு பயிற்சிப்பட்டறைகளையும், அவற்றில் இயங்கியவர்களையும் ஒரளவு கவலையோடு பார்த்தார்கள். அப்போது பார்த்து...

வாடாப்பூவும் எஸ்தரும் ஒடி வந்தார்கள். தொலைவிலேயே, முன்னவள், பின்னவளுக்கு, கலைவாணியை அடையாளம் காட்டிவிட்டாள். கலைவாணி, தன் கையைப் பிடித்த வாடாப்பூவிடம், கேட்டாள்.

‘இவங்க, யாருக்கா?”

‘நானே சொல்றேன், என் பெயர் எஸ்தர்... ஒன் ஹஸ்பென்ட் மனோகரோட...’

‘எனக்கு, எவரும் கணவர் இல்ல... இந்தாப் பாரு கழுத்தை’

‘சரி... நான் ஒன் முன்னாள் புருஷனோட கீப்பு. பச்சையா சொல்லப் போனால், நான்... அவனை வச்சிட்டு இருந்தேன்...’

‘என்ன நீ... காட்டுமிராண்டி மாதிரி...”

வாடாப்பூ. எஸ்தரை பின்னால் தள்ளிவிட்டு பேசினாள். அவள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/338&oldid=635795" இலிருந்து மீள்விக்கப்பட்டது