பக்கம்:பாலைப்புறா.pdf/339

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு.சமுத்திரம் 339

முகத்திலும் பெரிய சூரியக் கொப்பளம். அதைச்சுத்தி, பூமிக்கோளம் மாதிரி, பாதி வெளிச்சமும், மீதி இருளுமான கொப்பளங்கள். கலைவாணி, தன்னிடம் வரச்சொல்லியும், சாக்குப் போக்கு சொல்லிக் கொண்டிருப்பவள். ஊன் உருகப் பேசினாள்.

‘புருசனோ இல்லியோ? மனோகரை ஊருக்கு வெளியில போட்டு வச்சிருக்கு. அவர் படுற அவஸ்தை கொஞ்ச நஞ்சமில்ல. ஒன்னை பார்க்கணுமுன்னு துடிக்காரு. அப்படிப் பார்த்துட்டால், சீக்கிரமா உயிர் போயிடும்...’

‘நான் யாரையும் பார்க்கிறதாய் இல்ல...’

டாக்டர் அசோகன், தீர்க்கமாய் பேசினான். ‘இவங்க மனோகரோட மாஜி மனைவி கலைவாணியைக் கூப்பிடல... எய்ட்ஸ் நோயாளிகளை கருணையோடு கவனிக்கிற ஒரு நல்ல அமைப்புன்னு, நம்பப்படுகிற அமைப்போட செயலாளர் கலைவாணியை கூப்பிடுறாங்க. கடைசிக் கட்டத்திலஅவஸ்தைப்படுற ஒரு எய்ட்ஸ் ஜீவனைப் நல்லபடியாய் அனுப்பி வைக்கிறதுக்கு கூப்பிடுறாங்க.”

கலைவாணி, எல்லாரையும் ஜீவனற்றுப் பார்த்தாள்...

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/339&oldid=635796" இலிருந்து மீள்விக்கப்பட்டது