பக்கம்:பாலைப்புறா.pdf/340

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2யிருக்குப் புறம்பாய் உள்ள சுடுகாடு. வாழ்கிறவர்களைத் தலையில் சுமந்தும், வாழ்ந்தவர்களை வயிற்றுக்குள் சுமந்தும், பூடகமாய்ப் பேசும் மயானம், எந்த பகுதியையும் போல் அந்தப் பகுதியில் இருப்பவர்களின் எண்ணிக்கையை விட, இறந்தவர்கள் எண்ணிக்கை அதிகம் என்பதை, எலும்பு சாட்சியாய் நிரூபிக்கும் சமத்துவ பூமி.

இந்த சுடுகாட்டின் எல்லை முடியும் மேட்டில், ஒரு பனந்தோப்பு. நேராய் நிமிர்ந்த பனைகளில், மார்பில் தோல் கவசத்தோடு ஏறும் பனையேறித் தொழிலாளர்கள்... பனைநாரை, கால் நாராய் போட்டு கரடிப் பிழைப்பு நடத்துபவர்கள்... ஆங்காங்கே உள்ள ‘விடிலிகளில் கல் அடுப்புக்களில் பதனீர் காய்ச்சி, காய்ச்சியதை, சிறட்டைகளில் ஊற்றி, அவற்றைக் கருப்பட்டிகளாய் ஆக்கும் பெண்கள்.

இப்படிப்பட்ட, பச்சை ஓலையும், பழுத்த ஒலையும் விழும் இடத்தில் பனைமரக் கம்புகளில், ஒலை மறைப்புக்களைக் கொண்ட ‘விடிலி’ எனப்படும் சுவரில்லாத குடிசை, அதில் ஒரு சேலை விரித்த பனங்கட்டிலில், மனோகர், ஈரப்பட்ட விறகாய்க் கிடந்தான். கண்கள் மட்டும், மின்மினிப் பூச்சிகளாய் துடித்துத் துடித்து துள்ளின. மற்றபடி, உடலில் எந்த அசைவும் இல்லை.

இந்த விடிலிக்கு வெளியே, ஒரு கருங்கல்லில், சீதாலட்சுமி விறைத்துப் போய்க் கிடந்தாள். அழுதழுது முகம் வீங்கிவிட்டது. கதறிக் கதறி, குரல் கட்டிவிட்டது. அவள் பக்கத்தில், மூத்த மகள் சகுந்தலா; அந்தப் புடலங்காய் உடம்பு. செத்துக் கொண்டு இருக்கும் தம்பிக்காகவும், சாகப் போகிற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/340&oldid=635798" இலிருந்து மீள்விக்கப்பட்டது